அடுத்த லெவலுக்கு செல்லும் பிக்பாஸ்!! அறிமுகப்படுத்திய SK – அல்டிமேட் ஷோவில் அப்படி என்ன ஸ்பெஷல்?

by Column Editor

விரைவில் தமிழிலும் ஓடிடி-க்கென பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இந்த நிகழ்ச்சியையும் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்க உள்ளார்.

உலகளவில் பிரபலமான ரியாலிட்டி ஷோவான பிக்பாஸ் கடந்த 2017-ம் ஆண்டு தமிழில் அறிமுகமானது. விறுவிறுப்புக்கும், பரபரப்புக்கும் பஞ்சமில்லாத இந்நிகழ்ச்சி அந்த ஆண்டே ரசிகர்களின் பேவரைட் நிகழ்ச்சியாக மாறியது. இந்நிகழ்ச்சியின் கூடுதல் சிறப்பு என்றால் அது கமல்ஹாசன் தான்.

அவர் தொகுத்து வழங்கும் விதம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்ததால், இன்றளவும் 5-வது சீசன் வரை அவரே தொகுத்து வழங்கி வருகிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில், ஆரவ்வும், இரண்டாவது சீசனில் ரித்விகாவும், மூன்றாவது சீசனில் முகினும், நான்காவது சீசனில் ஆரியும், ஐந்தாவது சீசனில் ராஜுவும் டைட்டில் வின்னர்களாகினர்.

சமீப காலமாக ஓடிடி தளங்கள் மக்களிடையே மிகவும் பிரபலமாகி வருகின்றன. இதனால் அதில் படங்களை நேரடியாக வெளியிடுவது போன்ற பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தியில், பிக்பாஸ் நிகழ்ச்சி பிரத்யேகமாக ஓடிடிக்கு என தயாரிக்கப்பட்டு, வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது. வழக்கமான பிக்பாஸ் நிகழ்ச்சி போல் இல்லாமல் 42 நாட்கள் மட்டுமே ஓடிடி பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

இந்நிலையில், தற்போது தமிழிலும் அதே பார்முலாவை பின்பற்ற முடிவு செய்துள்ளனர். அதன்படி விரைவில் தமிழிலும் ஓடிடி-க்கென பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இந்த நிகழ்ச்சியையும் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்க உள்ளார். நேற்று நடைபெற்ற பிக்பாஸ் 5 நிகழ்ச்சியின் பைனலில் இதற்கான அறிவிப்பை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டார்.

மேலும் இந்நிகழ்ச்சிக்கு ‘பிக்பாஸ் அல்டிமேட்’ என பெயரிட்டுள்ளனர். இந்நிகழ்ச்சி 24 மணிநேரமும் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. இதனை பிரபலப்படுத்தும் விதமாக, இதுவரை நடந்து முடிந்த 5 சீசன்களில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட போட்டியாளர்களை களமிறக்க திட்டமிட்டுள்ளனர். அந்த வகையில் ஜூலி, வனிதா, அனிதா, பாலாஜி முருகதாஸ் உள்ளிட்டோர் பங்கேற்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Related Posts

Leave a Comment