மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைகிறாரா இந்த முக்கிய போட்டியாளர்! அட.. இதுதான் காரணமா?

by Column Editor

விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் சீசன் 5 தொடங்கி பரபரப்பாக சென்று கொண்டுள்ளது. இந்த சீசனில் பல்வேறு துறையை சேர்ந்த 18 பிரபலங்கள் போட்டியாளர்களாக கலந்து கொண்டனர். இவர்களில் திருநங்கையான நமீதா சில தவிர்க்க முடியாத காரணங்களால் ஒரு சில நாட்களிலேயே பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். அவரைத் தொடர்ந்து நாடியா சாங், அபிஷேக், சின்ன பொண்ணு, சுருதி மற்றும் கடந்த வாரம் மதுமிதா என அடுத்தடுத்ததாக போட்டியாளர்கள் குறைந்த வாக்குகளைப் பெற்று வெளியேறினர்.

பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது மிகவும் பரபரப்பாகவும், சர்ச்சைகளை கிளப்பிய நிலையில் இருந்தவர் அபிஷேக். அவர் நிகழ்ச்சி தொடங்கிய மூன்றாவது வாரத்திலேயே வெளியேறினார். பின்னர் நாளுக்கு நாள் பிக்பாஸ் நிகழ்ச்சியில் சுவாரஸ்யம் குறைந்து வருகிறது. இந்த நிலையில் நிகழ்ச்சியின் விறுவிறுப்பை அதிகரிக்க மீண்டும் அபிஷேக்கை வைல்ட் கார்ட் என்ட்ரி மூலம் பிக்பாஸ் வீட்டிற்கு அனுப்ப திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

இதற்கு முன் ஏற்கனவே பிக்பாஸ் சீசன் 3-ல் போட்டியாளராகக் கலந்து கொண்ட வனிதா எலிமினேட் ஆன நிலையில் மீண்டும் சுவாரசியத்திற்காக வைல்டு கார்டு என்ட்ரி மூலம் வீட்டிற்குள் நுழைந்தார். அதுபோல தற்பொழுதும் அபிஷேக்கை பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்பவுள்ளதாக கூறப்படுகிறது. தமிழில் பிரபல சின்னத்திரை நடிகர் சஞ்சீவ்வும் வைல்ட் கார்டு என்ட்ரி மூலம் பிக்பாஸ் வீட்டில் நுழையவுள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது.

Related Posts

Leave a Comment