DNA டெஸ்ட் எடுக்க போகும் பாரதி.. கண்ணம்மா சீரியலுக்கு இந்த வருடம் என்ட் கார்டு?

by Column Editor

பாரதிக்கு சீக்கிரமாக டெஸ்ட் எடுத்து, உண்மையை உலகுக்கு காட்டி சீரியலை முடித்து வையுங்கள் இயக்குனரே…

பாரதி கண்ணம்மா சீரியலில் டாக்டர் பாரதி DNA டெஸ்ட் எடுக்க போகிறார். பாரதி வைத்த போட்டியில் கண்ணம்மா ஜெயித்ததால், நீதி காத்த அம்மன் கோயிலில் வைத்து கண்ணம்மா, பாரதியை DNA டெஸ்ட் எடுக்க சொல்கிறார். இது குறித்த புரமோ தற்போது வெளியாகியுள்ளது.

விஜய் டிவியில் பாரதி கண்ணம்மா சீரியல் ஒளிப்பரப்ப தொடங்கிய நாளிலிருந்து மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. சின்னத்திரைக்கு புது முகங்களான அருண் பிரசாத், ரோஷினி, கண்மணி ஆகியோரை முன்னிலைப்படுத்தி இயக்குனர் சீரியலை தொடங்கினார். முக்கியமாக இந்த சீரியலில் மாமியார் சவுந்தர்யா ரோலுக்கு மிகப்பெரிய அளவில் வரவேற்பு கிடைத்தது.

1 வருடத்திற்கு பிறகு சீரியல் டாப் ரேட்டிங்கில் வர தொடங்கியது. மற்ற டிவி சேனல்களில் ஒளிப்பரப்பாகும் டாப் சீரியல்களும் பாரதி கண்ணம்மா சீரியலில் ரேட்டிங்கை அடிக்க முடியாமல் திணறி வந்தனர். இந்த நேரத்தில் தான் சீரியலில் கண்ணம்மாவாக நடித்த ரோஷினி ஹரிப்பிரியன் சீரியலை விட்டு விலகினார்.

இதனால் சீரியல் மிகப் பெரிய சரிவை சந்தித்தது. புது கண்ணம்மாவாக வினுஷா தேவி அறிமுகமானார். முதல் 2 வாரத்தில் இவரின் நடிப்பு ரசிகர்களை பெரிதாக ஈர்க்கவில்லை. இதனால் சீரியல் குழு பெரும் வருத்தத்தில் இருந்தது. இந்நிலையில் சீரியலில் அதிரடியாக பல மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன. வழக்கத்திற்கு மாறாக பாரதி மற்றும் கண்ணம்மாவுக்கு இடையில் ரொமான்ஸ் காட்சிகள், சிறப்பு தோற்றத்தில் அறந்தாங்கி நிஷா என ஏகப்பட்ட மாற்றங்கள் கதைக்களத்தில் கொண்டு வரப்பட்டு இப்போது சீரியலை ரசிகர்கள் பழைப்படி ரசிக்க தொடங்கி விட்டனர்.

இந்நிலையில், கடந்த 2 நாட்களாக சீரியலில் நீதி காத்த அம்மன் கோயிலில் கண்ணம்மாவின் உண்மையை சோதிக்க பாரதி வைத்த பலபரீட்சை காட்சிகள் காட்டப்பட்டு வருகின்றன. அதாவது, நீதி காத்த அம்மன் கோயிலில் பொங்கல் வைத்தால், யார் பக்கம் உண்மையும் நீதியும் இருக்கிறதோ அவர் வைக்கும் பொங்கல் தான் முதலில் பொங்கும் என்ற ஐதீகம் இருக்கிறது. இந்த விஷயத்தை தெரிந்து கொண்டு தான் பாரதி மொத்த குடும்பத்தையும் அங்கு அழைத்து செல்கிறார்.

சொல்லி வைத்தப்படி, உண்மை இருக்கும் கண்ணம்மா பக்கம் பொங்கல் பொங்குகிறது. இதனால் மொத்த குடும்பமும் கண்ணம்மா பக்கம் நிற்கிறது. பாரதி வழக்கம் போல் குழப்பத்தில் நிற்கிறார். அடுத்தது என்ன? பாரதி கண்ணம்மாவை புரிந்து கொண்டு ஒன்று சேர்ந்து விடுவாரா? என்ற ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், சட்டப்பூர்வமாக உண்மையை நிரூப்பிக்க டி.என்.ஏ டெஸ்ட் எடுக்க சொல்லி பாரதிக்கு செக் வைக்கிறார் கண்ணம்மா. இதுக் குறித்த புரமோவை விஜய் தொலைக்காட்சி தற்போது வெளியிட்ட நிலையில், பாரதிக்கு சீக்கிரமாக டெஸ்ட் எடுத்து, உண்மையை உலகுக்கு காட்டி சீரியலை முடித்து வையுங்கள் இயக்குனரே என்று ரசிகர்கள் அன்பு கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Posts

Leave a Comment