செலவே இல்லாமல் உங்க வீட்டு செடிகளை பராமரிக்க, பூக்கள் பூத்துக் குலுங்க இந்த 10 வகையான குறிப்புகளை தெரிந்து கொள்ளுங்கள்

by Column Editor

இன்று இயற்கையின் முக்கியத்துவத்தை அறிந்து பலரும் தங்களது வீடுகளில் பூக்கள் மற்றும் காய் செடிகளை வளர்க்க ஆரம்பித்துள்ளனர். இடம் இல்லாதவர்கள் கூட மாடி தோட்டம் என்ற பெயரில் தங்களுக்குத் தேவையான காய்கறிகளை தாங்களே விளைவித்துக் கொள்கின்றனர். தோட்டம் வைத்திருப்பவர்களுக்கு அங்குள்ள செடிகளை பராமரிக்க தெரியாமல் போனால் அவர்கள் செய்த வேலை எல்லாம் வீணாகிப் போகும். அவ்வாறு ஒரு சிலர் இவற்றிற்காக தனியாகச் செலவு செய்ய வேண்டுமே என்று பயந்தே செடி வளர்ப்பதில் ஆர்வம் இல்லாமல் இருக்கிறார்கள். ஆனால் செடி வளர்ப்பதற்கு தனியாக எந்தவித செலவும் செய்ய வேண்டிய அவசியம் கிடையாது. வீட்டில் உள்ள தேவையற்ற பொருட்களையே செடிகளுக்கு உரமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம். வாருங்கள் உங்கள் செடிகளை பராமரிக்க சிறந்த 15 குறிப்புகளைப் பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

செடிகளை வாங்கி வந்து வைத்து விட்டால் போதாது அவற்றை சரியாக பராமரித்தால் மட்டுமே அவை நமக்கு நல்ல பலனைக் கொடுக்கின்றன அதற்குத் தேவையான நேரங்களில் சரியான ஊட்டச்சத்து கொடுக்க வேண்டும் இதற்காக வீட்டில் நாம் தேவை இல்லை என்று தூக்கிப் போடும் பொருட்களையும் பயன்படுத்திக்கொள்ளலாம் அவ்வாறு நமது வீட்டிலுள்ள எவற்றையெல்லாம் செடிகளுக்கு உரமாக பயன்படுத்தலாம் என்று தெரியுமா?

ஒவ்வொரு வீட்டிலும் இரவில் வாழைப்பழம் சாப்பிடுவதை வழக்கமாக வைத்திருப்பார்கள். பழத்தை சாப்பிட்டு வாழைப்பழத் தோலை தண்ணீரில் ஊற வைத்தோ அல்லது மிக்ஸியில் அரைத்துக்கொண்டோ அதனுடன் தண்ணீர் சேர்த்து அந்த தண்ணீரை செடிகளுக்கு உரமாக பயன்படுத்தலாம். அரிசி மற்றும் பருப்பு கழுவிய தண்ணீரை செடிகளுக்கு தொடர்ந்து ஊற்றி வருவதன் மூலம் நல்ல வளர்ச்சியைக் காண முடியும்.

இட்லி தோசை காக வீட்டில் அரைத்து வைத்திருக்கும் மாவு புளித்து விட்டது என்றால் அதனுடன் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து அதையும் செடிகளுக்கு ஊற்றி வர நல்ல பலனைக் கொடுக்கிறது இவற்றில் இருக்கும் நல்ல பாக்டீரியாக்கள் செடியின் வளர்ச்சிக்கு துணை புரிகிறது.

அடுத்ததாக வீட்டில் சட்னிக்கு தேங்காய் உடைக்கும் போது அதில் இருக்கும் தேங்காய் தண்ணீரை செடிகளுக்கு ஊற்றி வரலாம். அடுத்ததாக டீ போடுவதற்காக டிக்காஷன் போட்டு அந்த டீத்தூளை செடிகளுக்கு உரமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம். பிறகு உணவிற்காக பயன்படுத்தும் தயிர் அதிகமாக புளித்துவிட்டால் அதனையும் செடிகளுக்கு உரமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம். தினமும் சாதம் வடித்த தண்ணீரையும் ஆறவைத்து செடிகளுக்கு ஊற்றி வரலாம்.

சமையலுக்கு பயன்படுத்தப்படும் தேங்காயை அரைத்து பால் எடுத்து விட்டு அதன் சக்கையை தூக்கி போடாமல், மறுபடியும் இரண்டு மூன்று முறை தண்ணீர் ஊற்றி அதை மிக்ஸியில் நன்றாக அடித்து அந்த தண்ணீரையும் செடிகளுக்கு ஊற்றலாம். அடுத்ததாக வெங்காயம் மற்றும் பூண்டு தோலை ஒரு நாள் முழுவதும் தண்ணீரில் ஊறவைத்து அந்த தண்ணீரை செடிகளுக்கு ஊற்றி வரலாம். மீன், மாமிசம் போன்றவற்றை தண்ணீர் ஊற்றி கழுவி அந்த கழுவிய தண்ணீரைச் செடிகளுக்கு ஊற்றுவதன் மூலம் செடிகள் நல்ல மகசூலைக் கொடுக்கிறது.

Related Posts

Leave a Comment