ஐபிஎல் 2022; புதிய அணிகளுக்கு கேப்டனாகும் ஹர்திக் பாண்ட்யா, கே.எல். ராகுல்

by Column Editor

இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டி ஏப்ரல் மாதம் 15-வது நடைபெற இருக்கிறது. இந்த தொடருக்கு முன்னதாக ஏற்கனவே உள்ள 8 அணிகள் உடன் சேர்த்து தற்போது அகமதாபாத் மற்றும் லக்னோ ஆகிய நகரங்களை தலைமையாகக் கொண்டு இரண்டு புதிய அணிகள் சேர்க்கப்பட்டுள்ளன.

இதில் புதிதாக இணைந்துள்ள இரு அணிகளும் மெகா ஏலத்திற்கு முன்னதாகவே தாங்கள் அணியில் எடுக்க நினைக்கும் 3 வீரர்களை தேர்வு செய்யலாம் என்றும் பி.சி.சி.ஐ அனுமதி வழங்கியுள்ளது.

இதனால், அகமதாபாத் மற்றும் லக்னோ ஆகிய அணிகள் தங்களது அணியில் இணைக்க இருக்கும் வீரர்களை தீவிரமாக ஆலோசித்து வருகிறது. அதன்படி, ஆல்ரவுண்டர் ஹார்டிக் பாண்டியாவை அகமதாபாத் அணி ஏற்கனவே தேர்வு செய்ய இருப்பதாக நிறைய பேச்சுகள் அடிபட்டு வந்தது.

மேலும், அந்த அணிக்கு அவரை கேப்டனாகவும் நியமிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதேப்போல் லக்னோ அணி லோகேஷ் ராகுலை ஏலத்துக்கு முன்பு எடுக்கிறது.

அவர் அந்த அணிக்கு கேப்டனாக நியமிக்கப்படுகிறார். இதேபோல், ஸ்டோனிஸ் (ஆஸ்திரேலியா), ரபடா (தென் ஆப்பிரிக்கா) ஆகியோரும் அந்த அணிக்கு எடுக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த இரு புதிய அணிகளும் வருகிற 15-ந் தேதிக்குள் தேர்வு செய்த வீரர்களின் பட்டியலை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Posts

Leave a Comment