பிக் பாஸ் போவதற்காக சன் டிவி கொடுத்த பெரிய வாய்ப்பை நிராகரித்த சஞ்சீவ்! அதிர்ச்சி தகவல்

by Lifestyle Editor

நடிகர் சஞ்சீவ் திரைப்படங்களில் நடித்து அதன்பின் சின்னத்திரையில் ஹீரோவாக நடித்து பெரிய அளவில் பிரபலம் ஆனவர். அவர் தற்போது நடந்துகொண்டிருக்கும் பிக் பாஸ் 5ம் சீசனில் வைல்டு கார்டு எண்ட்ரியாக நுழைந்து சில வாரங்கள் இருந்தார். கடந்த வாரம் தான் அவர் ஷோவில் இருந்து எலிமினேட் ஆனார்.

இந்நிலையில் அவர் பிக் பாஸ் செல்வதற்காக சன் டிவி சீரியல் வாய்ப்பை நிராகரித்தார் என்கிற தகவல் பலருக்கும் அதிர்ச்சி கொடுத்து இருக்கிறது.

வானத்தைப்போல சீரியலில் சின்ராசு ரோலில் நடித்து வந்த தமன் குமார் அதில் இருந்து திடீரென விலகிய நிலையில் அந்த ரோலில் அடுத்து சஞ்சீவ் தான் நடிக்க இருந்தாராம். ஆனால் பிக் பாஸ் செல்வதற்காக சஞ்சீவ் அதை நிராகரிக்க அந்த வாய்ப்பு ஜீ தமிழ் சீரியல் புகழ் ஸ்ரீகுமாருக்கு சென்று இருக்கிறது.

டிஆர்பியில் நல்ல ரேட்டிங் பெற்றுக்கொண்டிருக்கும் சீரியல் வாய்ப்பை சஞ்சீவ் இப்படி விட்டுவிட்டாரே என சின்னத்திரை ரசிகர்கள் சற்று ஷாக் ஆகி இருக்கின்றனர்.

Related Posts

Leave a Comment