362
			
				            
			        
    வெளிநாட்டில் இருந்து வேல்ஸுக்கு வரும் முழுமையாக தடுப்பூசி போடப்பட்டவர்கள், அவர்கள் புறப்படுவதற்கு முன் கொவிட் பரிசோதனை அல்லது அவர்கள் வந்த பிறகு பி.சி.ஆர். பரிசோதனையை மேற்கொள்ள வேண்டியதில்லை.
அதற்குப் பதிலாக அவர்கள் வேல்ஸுக்கு வந்த பிறகு இரண்டாவது நாளில் lateral flow சோதனையை மேற்கொள்ள வேண்டும்.
எதிர்மறையான முடிவைப் பெறுவதற்கு முன்பு தனிமைப்படுத்த வேண்டிய கட்டாயம் இனி இருக்காது.
ஆனால், சோதனை நேர்மறையாக இருந்தால், பயணிகள் பி.சி.ஆர். பரிசோதனை செய்து தனிமைப்படுத்த வேண்டும்.
ஜனவரி 7ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 04:00 மணியிலிருந்து விதிகளில் மாற்றங்கள் நடைமுறைக்கு வரும் என்று வேல்ஸ் அரசாங்கம் கூறியது. lateral flow சோதனைகள் ஜனவரி 9ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை முதல் வருகைக்கு பிந்தைய சோதனைகளாக ஏற்றுக்கொள்ளப்படும்.
