எங்களுக்கு சார்லஸ் மன்னராக வேண்டாம் – கிளம்பியுள்ள புதிய சர்ச்சை …

by Lifestyle Editor

பிரித்தானியா, மன்னர் சார்லசுடைய முடிசூட்டுவிழாவிற்காக தயாராகிக்கொண்டிருக்கும் நிலையில், பிரித்தானியாவின் கட்டுப்பாட்டிலிருக்கும் நாடு ஒன்று தங்களுக்கு மன்னர் வேண்டாம் என முடிவு செய்துள்ளது.

மன்னர் சார்லசுடைய தலைமையின் கீழ் பிரித்தானியா மட்டுமின்றி அவுஸ்திரேலியா, கனடா, Grenada, ஜமைக்கா, நியூசிலாந்து, பாப்புவா நியூகினியா உட்பட 14 நாடுகள் உள்ளன என்பதை பலரும் அறிந்திருக்கக்கூடும்.

அந்த 14 நாடுகளில் ஒன்றான ஜமைக்கா, வேகமாக, குடியரசாகும் முயற்சிகளைத் துவக்கியுள்ளது. எங்களுக்கு இனி மன்னர் வேண்டாம், எங்களை நாங்களே ஆண்டுகொள்வோம் என விரைவில் முடிவு செய்ய இருக்கிறது ஜமைக்கா.

புதிய சர்ச்சை :

பிரித்தானியாவின் ஆட்சியின் கீழ் கஷ்டங்கள் அனுபவித்த பல நாடுகள் மறைந்த எலிசபெத் மகாராணியார் தங்கள் ராணியாக இருப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

ஆனால், அவர் மறைந்து, சார்லஸ் மன்னரானதும், அவரை தங்கள் மன்னராக ஏற்றுக்கொள்வதில் பல நாடுகள் தயக்கம் காட்டிவருகின்றன.

Related Posts

Leave a Comment