தனியா (மல்லி) சட்னி

by Column Editor

தனியா (மல்லி) – 2 தேக்கரண்டி
கடலை பருப்பு – 1 தேக்கரண்டி
உளுந்தம் பருப்பு – 1 தேக்கரண்டி
புளி – சிறு நெல்லிக்காய் அளவு
தக்காளி – 1 (பெரியது)
வெங்காயம் – 1
மிளகாய் வற்றல் – 4-5
உப்பு

தாளிக்க:

எண்ணெய் – தேவைக்கேற்ப
கடுகு, உளுந்தம் பருப்பு – 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை

தேவையான பொருட்களை தயாராக எடுத்துக் கொள்ளவும். வெங்காயம், தக்காளியை நீளவாக்கில் வெட்டிக் கொள்ளவும்.

வாணலியில் 1 கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடலை பருப்பு, உளுந்தம் பருப்பை சேர்த்து வறுக்கவும். பருப்புகள் நிறம் மாறியதும் தனியா, மிளகாய் வற்றல், புளி சேர்த்து தனியா வாசம் வரும் வரை வறுக்கவும். வாசம் வந்ததும் வேறு தட்டிற்கு மாற்றி விடவும்.

அதே வாணலியில் மேலும் ஒரு கரண்டி எண்ணெய் ஊற்றி வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும். பொன்னிறமானதும் தக்காளி, உப்பு சேர்த்து குழைய வதக்கவும். வதக்கியவற்றை ஆற வைத்து தனியாவுடன் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும்.

தாளிப்பு கரண்டியில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து சட்னியில் சேர்க்கவும்.

சுவையான தனியா சட்னி தயார். இட்லி, தோசைக்கு ஏற்ற சட்னி.

Related Posts

Leave a Comment