கறிவேப்பிலை மிளகு சாதம்

by Lifestyle Editor

தேவையான பொருட்கள் :

சாதம் – ஒரு கப்,
கறிவேப்பிலை – ஒரு கப்,
வறுத்த வேர்க்கடலை – விருப்பத்திற்கேற்ப
மிளகு – 2 டீஸ்பூன்
பெருங்காயம் – சிறிதளவு ,
நெய் – 2 டீஸ்பூன்,
கல் உப்பு – தேவையான அளவு.

தாளிக்க

கடுகு – அரை டீஸ்பூன்,
கறிவேப்பிலை – சிறிது,
காய்ந்த மிளகாய் – 2

செய்முறை:

வாணலியில் மிளகை சேர்த்து, அடுப்பை ‘சிம்’மில் வைத்து, கருகிவிடாதபடி வறுக்கவும். கறிவேப்பிலையை தனியாக வறுக்கவும். பெருங்காயத்தை பொரித்து எடுக்கவும். அடுப்பை நிறுத்தி, கடைசியில் கல் உப்பை போட்டு, வறுத்துக் கொள்ளவும். ஆறியதும் எல்லாவற்றையும் மிக்சியில் போட்டு நைஸாக பொடி செய்யவும். வாணலியை அடுப்பில் வைத்து நெய் விட்டு சூடானதும் கடுகு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் சேர்த்து தாளித்து, சாதத்தில் சேர்த்து, வறுத்த வேர்க்கடலை, கறிவேப்பிலை – மிளகு பொடியைப் போட்டு கலக்கவும். இதை சூடாக சாப்பிட்டால், இருமல் நிற்கும். பசியையும் தூண்டும். இந்த கறிவேப்பிலை மிளகு பொடியை செய்து வைத்து கொண்டால் எப்போது வேண்டுமானாலும் சூடான சாதத்தில் போட்டு கலந்து சாப்பிடலாம்.

Related Posts

Leave a Comment