கன்பென்ஃஷன் ரூமிற்கு கூப்பிடும் கமல்.. புதிய ட்விஸ்ட்டால் போட்டியாளர்கள் பதற்றம் !

by Column Editor

போட்டியாளர் ஒவ்வொருவரையும் கன்பெக்ஃஷன் ரூமுக்கு கூப்பிட உள்ளதாக கமல் கூறும் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

பிக் பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. இந்நிகழ்ச்சி முடிய இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில் போட்டியாளர்களுக்கு கடுமையான டாஸ்க்குகள் கொடுக்கப்பட்டு விளையாடி வந்தனர். இதையடுத்து கடந்த சில நாட்களாக லக்சரி டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த டாஸ்க்கின்படி போட்டியாளர்களின் உறவினர்கள் பிக் பாஸ் வீட்டிற்கு வந்து சொந்தங்களை பார்த்து சென்றனர். இதனால் பிக்பாஸ் வீடே பாச மழையில் நனைந்து கொண்டிருந்தது.

​​​​​​இந்நிலையில் இன்று சனிக்கிழமை என்பதால் கமல் போட்டியாளர்களிடம் பேச உள்ளார். இதுகுறித்த ப்ரோமோதான் தற்போது வெளியாகியுள்ளது. அதில் பேசும் கமல், பாசமழை பெய்து முடிந்துவிட்டது பிக்பாஸ் வீட்டில் என்றும் மழைகாலம் முடிந்தால் வெயில் காலம் வருவது சகஜம் தானே என்றும் பொடி வைத்து பேசுகிறார் கமல்.

இதையடுத்து பேசும் அவர், அவை மரியாதை கருதி இத்தனை நாட்களாக இவர்களிடம் பேசி வந்தேன். உள்ளதை உள்ளபடி சொல்லவேண்டும் என்றால் உள்ளேதானே கூப்பிடவேண்டும். போட்டியாளர்களை கன்பெக்ஃஷன் ரூமிற்கு கூப்பிட்டு விடலாமா இன்று இரவு என்ற கேள்வியுடன் கமல் முடிக்கிறார். கமல் பேசுவதை பார்த்தால் இதில் எதோ பெரிய ட்விஸ்ட் இருப்பது போன்றே இருக்கிறது. அதனால் போட்டியாளர்கள் பதற்றத்தில் உள்ளனர்.

Related Posts

Leave a Comment