சன் டிவியின் நாதஸ்வரம் சீரியல் இப்படிபட்ட உலக சாதனை செய்ததா?- சீரியல் வரலாற்றிலேயே நிகழ்ந்த முதல் சம்பவம்

by Column Editor

தமிழில் சீரியல்களுக்கு பெயர் போன ஒரு தொலைக்காட்சி என்றால் அது சன் தான். அவர்கள் தொலைக்காட்சி ஆரம்பித்த நாளில் இருந்து தொடர்களை ஒளிபரப்பி வருகிறார்கள்.

தொலைக்காட்சியில் கடந்த 2014ம் ஆண்டு ஒரு உலக சாதனை செய்யப்பட்டது. அது என்னவென்றால் திருமுருகன் இயக்கத்தில் 90 நடிகர்கள் நடிக்க ஹிட்டாக ஓடிக் கொண்டிருந்த ஒரு தொடர் நாதஸ்வரம்.

தொடரின் 1000வது எபிசோடை படு பிரம்மாண்டமாக்க அவர்கள் ஒரு ஸ்பெஷல் விஷயம் செய்துள்ளார்கள். 1000வது எபிசோட் சன் தொலைக்காட்சியில் லைவ்வாக ஒளிபரப்பு செய்யப்பட்டிருக்கிறது.

2014ம் ஆண்டு மார்ச் 5ம் தேதி காரைக்குடி அருகிலுள்ள பள்ளத்தூரில் காட்சி எடுக்கப்பட்டிருக்கிறது. படப்பிடிப்பின் போதே பின்னணி இசையை சஞ்சீவ் ரத்தன் போட்டுள்ளார்.

லைவ்வாக ஒளிபரப்பான நாதஸ்வரம் 1000வது எபிசோட் கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம்பெற்றுள்ளது.

Related Posts

Leave a Comment