தொடர்ச்சியாக 3வது நாளாக சரிந்த தங்கம் விலை!

by Column Editor

தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் நேற்று திடீரென தங்கம் விலை சரிந்தது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் இன்றும் தங்கம் மற்றும் வெள்ளி விலை சென்னையில் குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய விலை குறித்த தகவலைப் பார்ப்போம்.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை உயர்ந்த நிலையில் இன்று கிராமுக்கு 11 ரூபாய் குறைந்து ரூபாய் 4537.00 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 88 குறைந்து ரூபாய் 36296.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 4903.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 39224.00 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை ஏற்ற இறக்கமின்றி ஒரு கிராம் ரூபாய் 65.80 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 65800.00 எனவும் விற்பனையாகி வருகிறது

Related Posts

Leave a Comment