சென்செக்ஸ் 889 புள்ளிகள் வீழ்ச்சி… முதலீட்டாளர்களுக்கு ரூ.4.73 லட்சம் கோடி நஷ்டம்..

by Column Editor

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் வீழ்ச்சி கண்டது. சென்செக்ஸ் 889 புள்ளிகள் குறைந்தது.

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கியது. இருப்பினும், அமெரிக்க பங்குச் சந்தைகளில் பங்கு வர்த்தகம் சரிவை சந்தித்தது, அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு வர்த்தகத்தின் இடையே வீழ்ச்சி கண்டது மற்றும் முதலீட்டாளர்கள் லாப நோக்கம் கருதி பங்குகளை விற்பனை செய்தது போன்ற காரணங்களால் பங்கு வர்த்தகம் வீழ்ச்சியுடன் முடிவடைந்தது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், இன்போசிஸ் மற்றும் எச்.சி.எல். டெக்னாலஜிஸ் உள்பட மொத்தம் 5 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், இண்டஸ்இந்த் வங்கி மற்றும் கோடக்மகிந்திரா வங்கி உள்பட மொத்தம் 25 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,049 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 2,292 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 98 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.259.40 லட்சம் கோடியாக குறைந்தது. ஆக, இன்று முதலீட்டாளர்களுக்கு பங்குச் சந்தையில் ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.4.73 லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டது.

மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 889.40 புள்ளிகள் குறைந்து 57,011.74 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 263.20 புள்ளிகள் சரிவு கண்டு 16,985.20 புள்ளிகளில் முடிவுற்றது.

Related Posts

Leave a Comment