இந்த பொருளை உங்க முகத்தில் தடவி கழுவினால்… உங்க முகம் அப்படி பளபளக்குமாம்

by Column Editor

பொதுவாக நம்மில் பல பெண்கள் இயற்கை அழகு என்று விரும்புபவர்கள் பெரும்பாலும் வீட்டிலிருக்கும் பொருள்களை கொண்டு பராமரிக்கவே விரும்புவார்கள். இதற்கு முன்பே அரிசி கழுவிய நீர் குறித்து பார்த்திருக்கிறோம்.

அதே போன்று அரிசி மாவும் சருமத்துக்கும் பலவிதமான நன்மைகளை தருகிறது. அந்தவகையில் தற்போது எந்தெந்த சரும பிரச்சனைகளுக்கு எப்படியெல்லாம் எதனுடன் சேர்த்து பயன்படுத்த வேண்டும் என்பதை தெரிந்துகொள்வோம்.

உடலில் இருக்கும் ஸ்ட்ரெச் மார்க் விரட்டி அடிக்க அரிசி மாவு உதவ அரிசிமாவுடன் மஞ்சள் தூள், காய்ச்சாத பசும் பால் சேர்த்து பேஸ்ட் போல் குழைக்கவும். இதை ஸ்ட்ரெச் மார்க் இருக்கும் இடங்களில் தடவி விடவும். 30 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.

அரிசி மாவு 3 டீஸ்பூன், பன்னீர் 3 டீஸ்பூன் மற்றும் தயிர் 3 டீஸ்பூன் சேர்த்து நன்றாக குழைத்து முகத்தில் பேக் போடவும். பிறகு நன்கு மசாஜ் செய்து விடவும். அப்படியே உலரவிடவும். 30 நிமிடங்கள் கழித்து முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.

அரிசி மாவை சிறிது நீரில் கரைத்து ஐஸ்க்யூப்களில் ஊற்றி வைக்கவும். அவை ஐஸ்கட்டிகளாக உறைந்ததும் அதை கொண்டு சருமத்தில் முகம் முழுக்க எங்கெல்லாம் அரிப்பு பிரச்சனை உள்ளதோ அங்கெல்லாம் ஒத்தடம் கொடுக்கவும்.

அரிசி மாவுடன் சர்க்கரை சேர்த்து உருட்டி முகத்தில் இலேசாக மசாஜ் செய்யவும். முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் மூக்கு நுனிகள் கழுத்தில் இருக்கும் கருமைகள் போன்ற இடங்களில் நன்கு ஸ்கரப் செய்து பிறகு குளிர்ந்த நீரில் முகத்தை கழுவவும்.பிறகு ஐஸ்கட்டிகள்கொண்டு முகத்துக்கு ஒத்தடம் கொடுக்கவேண்டும்.

அரிசிமாவை பன்னீரில் குழைத்து முகத்தில் தடவி இலேசாக ஐந்து நிமிடங்கள் தேய்த்து கழுவிய பிறகு முகத்தை பார்த்தால் மேக் அப் முழுவதும் நீங்கி முகம் பளிச்சென்று மின்னும்.

Related Posts

Leave a Comment