முகத்தில் உள்ள சுருக்கங்களை நீக்கி நிறத்தை கொடுக்கும் அழகு குறிப்புக்கள் !!

by Column Editor

நீராவி இது முகத்தில் இருக்கும் சுருக்கத்தை போக்க உதவும் மிகச் சிறந்த முறையாகும். முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை விட்டு நன்கு கொதிக்க விடவும். பின் அதனை முன் முகத்தை வைத்து 15 நிமிடம் நீராவி பிடிக்கவும். இது முகத்தில் இருக்கும் இறந்த செல்களை நீக்கிவிடும்.

பின் ஆவி பிடித்த பிறகு ஒரு சுத்தமான துணியால் முகத்தை துடைத்து விடவும். இதனால் முகமானது சற்று இறுக்கம் அடையும். மேலும் ஆவி பிடித்து துடைத்த பிறகு, முகத்திற்கு ஃபேசியல் கிரீமை போட்டு சற்று நேரம் மசாஜ் செய்யவும். இதனால் முகமானது பொலிவுடன் இருக்கும். இதனை வாரத்திற்கு இரு முறை, படுக்கும் முன் செய்ய வேண்டும்.
பருப்புவகை பருப்புகளை வைத்து ஃபேஸ் பேக் செய்தால் ஒரு நல்ல பலன் கிடைக்கும். 5-6 டேபிள் ஸ்பூன் எல்லா பருப்புகளும் கலந்த பருப்புகளை எடுத்துக் கொண்டு, நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். பின் அதில் சிறிது பாலை ஊற்றி கலந்து கொள்ள வேண்டும். பிறகு அதனை முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் கழுவவும். இதனால் முகத்தில் உள்ள சருமம் இறுக்கமடைவதுடன், மென்மையும் அடைகிறது. ஆகவே இந்த ஃபேஸ் பேக் முகத்தில் உள்ள சுருக்கங்களை நீக்குவதோடு, முகத்திற்கு நிறத்தையும் கொடுக்கிறது.
கடலை மாவு ஃபேஸ் மாஸ்க் இரண்டு டேபிள் ஸ்பூன் கடலை மாவுடன், ஒரு ஸ்பூன் தேனை விட்டு கலந்து, முகத்தில் மற்றும் கழுத்தில் தடவி, 20-25 நிமிடம் ஊற வைத்து பின் குளிர்ந்த நீரில் கழுவவும். இவ்வாறு செய்தால் முகத்தில் இருக்கும் சருமம் இறுக்கம் அடைந்து, சுருக்கத்தை போக்குகிறது. இந்த ஃபேஸ் மாஸ்க் எண்ணெய் சருமம் உள்ளவருக்கே சிறந்தது. வறண்ட சருமம் உள்ளவர்கள், இந்த ஃபேஸ் மாஸ்க் செய்தவுடன், ஃபேசியல் கிரீமை போட்டு சற்று நேரம் மசாஜ் செய்யவும்.

சோளமாவு ஃபேஸ் பேக் 2-3 டேபிள் ஸ்பூன் சோளமாவை எடுத்துக் கொண்டு, அதில் தேன் மற்றும் பாலை ஊற்றி நன்கு கலந்து கொள்ள வேண்டும். பின் அதனை முகத்திற்கு தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த தண்ணீரால் கழுவ வேண்டும். இவ்வாறு செய்தால், முதலில் இருந்த முகத்திற்கும், இந்த ஃபேஸ் பேக் போட்ட பின் இருக்கும் முகத்திற்கும் உள்ள வித்தியாசத்தை நன்கு காணலாம்.

Related Posts

Leave a Comment