முகத்தின் நிறத்தை எளியமுறையில் அதிகரிக்க வேண்டுமா? இதோ சில அழகு குறிப்புகள்

by Column Editor

பொதுவாக கோடை வெயில் நம்மை சுட்டெரிக்க, சருமத்தின் நிறமோ நாளுக்கு நாள் கருமையாகிக் கொண்டே போகிறது.

இப்படி சருமத்தின் நிறம் கருமையாவதால், ஆண்கள் விட பெண்களை அதிக அளவில் வருந்துகிறார்கள்.

மேலும் ஆண்கள் விட தங்கள் பெண்களை சருமத்திற்கு அதிக பராமரிப்புக்களை கொடுக்க முன் வருகின்றனர்.

இதற்கான பலர் கண்ட கண்ட இரசாயம் கலந்த கலவைகளை பூசி வருகிறார்.

ஆனால் இது அந்த அளவிற்கு நிரந்த தீர்வினை தராது. அந்தவகையில் சரும நிறத்தை எளியமுறையில் அதிகரிக்க கூடிய ஒரு சில இயற்கை வழிகள் என்னென்ன என்பதை பார்ப்போம்.

தக்காளிப் பழத்தை தோல் நீக்கி அதனை நன்கு அரைத்துக் கொள்ளவும். அதில் சிறிதளவு பால் கலந்து பேஸ்ட் போல செய்து முகத்திற்கு பூசவும். இதனால் முகத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசை நீங்குவதோடு முகம் பளிச்சென்று மாறிவிடும்.

தேனில் சிறிது எலுமிச்சை சாறு மற்றும் தயிர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து கழுவினால், முகம் ஆரோக்கியமாகவும், பளிச்சென்றும் காணப்படும். மேலும் இந்த முறையை தொடர்ந்து இரண்டு நாட்கள் செய்து வந்தால், முகத்தின் நிறம் அதிகரித்திருப்பதைக் காணலாம்.

சர்க்கரையில் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, அதனைக் கொண்டு சருமத்தை மசாஜ் செய்தால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் அனைத்தும் நீங்கி சரும துளைகளில் உள்ள அழுக்குகள் அனைத்தும் வெளியேறி சருமம் பொலிவோடு காணப்படும்.

தேங்காய் தண்ணீரைக் கொண்டு தினமும் இரண்டு முறை முகத்தை மசாஜ் செய்து 15 நிமிடம் ஊற வைத்து கழுவினால் முகத்தில் உள்ள தழும்புகள் கருமை நீங்கி முகம் பளிச்சென்று வெள்ளையாகும்.

தினசரி நாம் குடிக்கும் தண்ணீரின் அளவை அதிகரிக்க வேண்டும். அடிக்கடி தண்ணீரை குடிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

உருளைக்கிழங்கு பேஸ்டை அப்படியே முகத்தில் தடவலாம். அத்துடன் சிறிது பால் சேர்த்தும் முகத்த்தில் பேக் போடலாம்.

தக்காளிச் சாறு ஒரு ஸ்பூன் எடுத்துக்கொள்ளுங்கள். அத்துடன் சிறிது சர்க்கரை சேர்த்து கலந்து சருமத்தில் தடவி 15 நிமிடம் கழித்து கழுவுங்கள்.

இரவு தூங்குவதற்கு முன்னர் ரோஸ் வாட்டரை பஞ்சில் நனைத்து முகம் முழுவதும் மசாஜ் செய்யுங்கள்.

ஆலிவ் எண்ணையை முகத்தில் தடவி மசாஜ் செய்யலாம். இது சருமத்தில் உள்ள கருமைகளை நீக்குகிறது.

குங்குமப்பூவை பாலில் ஊற வைத்து நன்றாக ஊறியவுடன் அந்த கலவையை முகத்தில் பேக் போட்டு காய்ந்ததும் கழுவி விடுங்கள்.

Related Posts

Leave a Comment