நரைமுடியை இயற்கை முறையில் எந்த பக்கவிளைவுகளும் இல்லாமல் கருமையாக மாற்ற…

by Lifestyle Editor

நம்முடைய அம்மாக்கள், பாட்டிகளுக்கு தலைமுடி எவ்வளவு நீளமாக இருந்துள்ளது என்பதை நாம் அறிந்திருப்போம். அதற்கு என்ன காரணம் என்று சிந்தித்திருக்கின்றீர்களா?

தங்களது தலைக்கு பயன்படுத்தும் எண்ணெய்களில் பெரும்பாலும் இயற்கைப் பொருட்களே நிறைந்திருக்கும். இந்த எண்ணெயை கொண்டு, தலைமுடி மட்டுமல்லாது உடலுக்கு ஏற்படும் அனைத்து பிரச்சினைகளில் இருந்தும் அவர்கள் தங்களை காத்துக் கொண்டனர்.

அவர்கள் பயன்படுத்திய எண்ணெயில், கறுப்பு எள் மற்றும் நெல்லிக்காய் பிரதான பொருளாக இருந்து வந்துள்ளது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

கறுப்பு எள், கூந்தலை பராமரிப்பதோடு, முடியில் ஏற்படும் பல்வேறு பிரச்சினைகளுக்கும் தீர்வாக அமைகிறது. கறுப்பு எள்ளில் உள்ள ஒமேகா 3 மற்றும் ஒமேகா 6 கொழுப்பு அமிலங்கள், முடி வளர்ச்சியை தூண்ட உதவுகிறது.

இதில் உள்ள மாய்ஸ்சுரைசர்கள், தலை முடியில் வறட்சி ஏற்படுவதை தடுக்கிறது. கூந்தலுக்கு தேவையான நீரேற்றத்தை செய்வதனால், முடியில் பிளவு ஏற்படுவதை தடுக்கிறது. முடிக்கு தகுந்த பளபளப்பையும், வனப்பையும் கொடுக்கின்றது.

நரைமுடியை இயற்கை முறையில் எந்த பக்கவிளைவுகளும் இல்லாமல் கருமையாக மாற்ற கறுப்பு எள் மிக சிறந்த தீர்வாக காணப்படுகின்றது.

கறுப்பு எள் மற்றும் நெல்லிக்காய் கலந்த எண்ணெயில் இத்தகைய நற்பலன்கள் இருக்கும்போதும், இவை இரண்டும் சேர்ந்த கலவை, நம் கூந்தலுக்கு தேவையான அனைத்து போஷாக்குகளையும் வழங்குகின்றது.

Related Posts

Leave a Comment