அழகு பராமரிப்பில் பயன்படும் அரிசி கழுவிய தண்ணீர் !

by Web Team

அரிசி கழுவிய தண்ணீர் அழகு பராமரிப்பிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அரிசி கழுவிய தண்ணீரை வீணாக்காமல் கூந்தல் வளர்ச்சிக்கும், சருமத்தை அழகு படுத்துவதற்கும் பயன்படுத்தலாம்.

அரிசி கழுவிய நீரானது கூந்தலின் எலாஸ்டிசிட்டியை அதிகரித்து, அதனால் முடி பாதிக்கப்படுவது தடுக்கப்படுகிறது. அரிசியில் உள்ள ஸ்டார்ச் எனும் மூலக்கூறு தண்ணீரில் ஊறவைக்கும்போது 80 % உறிஞ்சப்படுகிறது. அந்த நீரில் விட்டமின் B, E ஆண்டி ஆக்ஸிடண்ட், பல மினரல் சத்துகள் ஆகியவை அடங்கியுள்ளன.

அரிசி தண்ணீர் என்பது தமிழ்நாட்டைப் பொருத்தவரை அரிய வகைப் பொருள் அல்ல. அதற்காக நீங்கள் பெரிதாக ஒன்றும் செய்ய வேண்டியதில்லை. தினமும் வீட்டில் சமைக்க அரிசி குறைந்தது அரை மணிநேரம் அல்லது 15 நிமிடங்கள் ஊறவைத்தாலே போதுமானது.

ஊறவைத்த அரிசி நீரைப் புளிக்கச் செய்து அதில் கொஞ்சம் நீர் கலந்து தலைக்குத் தேய்த்தாலும் இன்னும் கூடுதல் பலன் கிடைக்கும். நீங்கள் தலைக்குக் குளித்தபின் இறுதியாக இந்த தண்ணீரை தலையில் ஊற்றி அலசினால் நல்ல பலன் கிடைக்கும். உங்களுக்கு தேவை என்றால் வாசனைக்கு அந்த நீரில் வாசனை எண்ணெய் கலந்து கொள்ளலாம்.

கூந்தல் அதிக வறட்சியுடன் மென்மையின்றி இருந்தால், அப்போது அரிசி கழுவிய நீரைக் கொண்டு கூந்தலை அலசி, சிறிது நேரம் ஊற வைத்து, பின் சுத்தமான குளிர்ந்த நீரில் கூந்தலை அலச வேண்டும்.

அரிசி தண்ணீர் பெற அரிசியை நன்றாக 2 முறை கழுவிக்கொள்ள வேண்டும், பின்னர் அரிசியை சுத்தமான நீரில் 1/2 மணி நேரம் ஊறவைத்து, அந்த நீரை வடிகட்டவேண்டும். பின்னர் அந்நீரால் முகத்தையும், கூந்தலையும் பராமரிக்கலாம். இவ்வாறு செய்தால் முகத்தில் உள்ள சுருக்கங்கள் அனைத்தும் நீங்குவதோடு, சருமத்துளைகளும் அடைக்கப்படும்.

அரிசி கழுவிய நீரில் உள்ள சத்துக்கள் சருமத் துளைகளின் வழியே சரும செல்களுக்கு கிடைத்து, சருமம் ஆரோக்கியமாகவும் பொலிவோடும் இருக்கும்.

Related Posts

Leave a Comment