கோலி விலகல் – முதுகில் குத்திய பி.சி.சி.ஐ என ரசிகர்கள் கொந்தளிப்பு

by Column Editor

வரும் டிசம்பர் 26ம் தேதி தொடங்க இருக்கும் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. விராட்கோலி தலைமையிலான இந்திய அணியின் துணை கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட்டிருக்கிறார்.

அதேசமயத்தில், பி.சி.சி.ஐ. நிர்வாகம் இந்திய அணியின் ஒருநாள் மற்றும் டி20 கேப்டனாக இனிமேல் ரோகித் சர்மா செயல்படுவார் என்று அறிவித்துள்ளது. பி.சி.சி.ஐ.யின் இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனையடுத்து, டி-20 போட்டிகளில் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகுவதாக விராட்கோலி தானாக அறிவித்தார்.

அடுத்த உலககோப்பை வரை இந்திய அணியின் கேப்டனாக நீடிப்பார் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கோலியின் கேப்டன் பதவி பறிக்கப்பட்டிருப்பது கிரிக்கெட் ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனையடுத்து, டுவிட்டரில் ரசிகர்கள் விராட் கோலிக்கு ஆதரவாக களம் இறங்கி உள்ளனர். கோலி ரசிகர்கள் இந்திய அணி கிரிக்கெட் நிர்வாகத்தை கடுமையாக விமர்சித்து பதிவிட்டு வருகின்றனர்.

இதோ அந்த பதிவுகள் –

Related Posts

Leave a Comment