255
நடிகர் அமிதாஷ் பிரதான் மற்றும் சரத்குமார் நடிப்பில் உருவாகயிருக்கும் புதிய படம் இன்று பூஜையுடன் துவங்கியது.
நடிகர் அமிதாஷ் பிரதான் தமிழில் தனுஷ் நடிப்பில் வெளியான வேலையில்லா பட்டதாரி படத்தில் வில்லனாக நடித்திருந்தார். தற்போது அதர்வா மற்றும் அனுபமா நடித்துள்ள தள்ளிப் போகாதே படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
தற்போது அமிதாஷ் கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் துவங்கியுள்ளது. இந்தப் படத்தில் நடிகர் சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். நடிகை காஷ்மீரா பர்தேஷி கதாநாயகியாக நடிக்கிறார். இந்தப் படத்தை அனிருத் துவங்கி வைத்துள்ளார்.
இந்த படத்தை கவி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க அரவிந்த் ராஜ் என்பவர் இயக்குகிறார். படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.