இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் – டாஸ் வென்ற வங்கதேசம் பேட்டிங் ..

by Lifestyle Editor

இந்திய அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங் தேர்வு செய்து விளையாடி வருகிறது.

வங்கதேச நாட்டில் சுற்றுப்பயணம் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. ஒருநாள் தொடரை வங்கதேச அணி 2க்கு1 என்ற கணக்கில் கைப்பற்றிய நிலையில், தற்போது டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 188 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்திய முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் இந்தியா மற்றும் வங்கதேசம் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி டாக்கா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற வங்காளதேச அணி பேட்டிங் தேர்வு செய்தது. இதையடுத்து, வங்காளதேச அணி முதலில் பேட்டிங் செய்து விளையாடி வருகிறது.

இந்திய அணியில் குல்தீப் யாதவுக்கு மாற்றாக ஜெய்தேவ் உனத்கட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ரோகித் சர்மா காயத்தில் இருந்து மீளாத்தால் இந்திய அணியின் கேப்டனாக லோகேஷ் ராகுல் செயல்படுகிறார். இது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்ட தொடர் என்பதால் இந்தியாவுக்கு இந்த போட்டி முக்கியமானதாகும்.

Related Posts

Leave a Comment