இங்கிலாந்தில் உள்ள பெரும்பாலான உட்புற அரங்குகளில் முகக் கவசங்கள் கட்டாயம்!

by Column Editor

ஓமிக்ரோன் மாறுபாட்டைச் சமாளிப்பதற்கான நடவடிக்கைகளின் கீழ், இங்கிலாந்தில் உள்ள பெரும்பாலான உட்புற அரங்குகளில் முகக் கவசங்கள் இப்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளன.

புதிய விதிகளின்படி, திரையரங்குகள், வழிபாட்டுத் தலங்கள், அருங்காட்சியகங்கள் மற்றும் உட்புற விளையாட்டு அரங்கங்கள் உள்ளிட்ட இடங்களில் மக்கள் முகக் கவசம் அணிய வேண்டும்.

பிளான் பி கொவிட் கட்டுப்பாடுகள் என்று அழைக்கப்படும் அரசாங்கத்தின் நடவடிக்கையின் கீழ் அடுத்த வாரம் மேலும் மாற்றங்கள் தொடங்கும்.

ஆனால், கொவிட் பாஸ்களின் தாக்கம் மற்றும் வீட்டிலிருந்து வேலை செய்வது குறித்து வணிகங்கள் கவலை தெரிவித்துள்ளன.

ஓமிக்ரோன் மாறுபாட்டின் மேலும் 249 தொற்றுகள் வியாழக்கிழமை பிரித்தானியாவில் பதிவு செய்யப்பட்டன. தற்போது மொத்த எண்ணிக்கை 817ஆக உள்ளது.

Related Posts

Leave a Comment