ஆயிரக்கணக்கானோரை ஆட்குறைப்பு செய்யும் யூனிலீவர் நிறுவனம்!

by Column Editor

நுகர்வோர் பொருட்கள் நிறுவனமான யூனிலீவர் இந்த வாரம் ஆயிரக்கணக்கானோரை பணியிலிருந்து நீக்குவதற்கு தீர்மானித்துள்ளது.

மார்மைட் மற்றும் டோவ் சோப் தயாரிப்பாளர்கள், 100 க்கும் மேற்பட்ட நாடுகளில் ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்கும்.

கிளாக்சோ ஸ்மித்க்லைனின் நுகர்வோர் சுகாதாரப் பிரிவை 50 பில்லியன் பவுண்டுகளுக்கு வாங்கும் முயற்சியில் நிறுவனம் தோல்வியடைந்த ஒரு வாரத்திற்குப் பிறகு இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஆட்குறைப்பு குறித்து கருத்து தெரிவிக்க மறுத்த யூனிலீவர் நிறுவனம், அதன் வளர்ச்சியை விரைவுபடுத்த முதலீட்டாளர்களின் அழுத்தத்தை எதிர்கொள்கிறது.

உலகளவில் 149,000 ஊழியர்களைக் கொண்ட பிரித்தானியாவை தளமாகக் கொண்ட நிறுவனம், ஒரு பரந்த மறுசீரமைப்பின் ஒரு பகுதியாக பணிநீக்கங்களைச் செய்யும். ஆட்குறைப்பு எந்த துறையில் மேற்கொள்ளப்படும் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

பிரித்தானியா மற்றும் அயர்லாந்தில் மட்டும் 6,000 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிகின்றனர்.

Related Posts

Leave a Comment