230
இங்கிலாந்தில் 40 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் பூஸ்டர் தடுப்பூசியை பதிவு செய்துகொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டாவது தடுப்பூசியை பெற்றுக்கொண்டு மூன்று மாதங்கள் கடந்தவர்கள் முன்பதிவை மேற்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய ஒமிக்ரோன் மாறுபாட்டின் அச்சத்திற்கு மத்தியில் மேலும் ஏழு மில்லியன் மக்களுக்கு பூஸ்டர் தடுப்பூசியை முன்பதிவு செய்துகொள்வதற்கான அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி கிறிஸ்துமஸ் பண்டிகை வரை தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை துரிதகதியில் இடம்பெறும் என NHS தலைமை நிர்வாகி அமண்டா பிரிட்சார் கூறியுள்ளார்.
மேலும் முன்பதிவு செய்யும் நடைமுறையில் அதிக ஆபத்துள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றும் சுகாதார அதிகாரிகள் கூறியுள்ளனர்.