ரூ.2000 நோட்டுகள் அச்சடிப்பது நிறுத்தம் – மத்திய அரசு தகவல்…

by Column Editor

புழக்கத்தில் உள்ள 2000 ரூபாய் நோட்டுகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளதாகவும், இதனால் அச்சடிப்பது நிறுத்தப்பட்டதாகவும் மாநிலங்களவையில் மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து நாடாளுமன்றத்தின் கேள்வி நேரத்தின்போது பதிலளித்த அமைச்சர் பஞ்சஜ் சவுத்ரி : “ கடந்த 2016ஆம் ஆண்டு பணமதிப்பிழப்பு நடவடிக்கையை தொடர்ந்து 2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. கடந்த 2011ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி நிலவரப்படி ரூ. 336 கோடியே 30 லட்சம் எண்ணிக்கையில் 2000 ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்தில் இருந்ததாக தெரிவித்தார். இது அப்போதைய மொத்த நோட்டுகளில் 3.27 சதவிகிதமாகும்.

ஆனால் கடந்த மாதம் 26ஆம் தேதி நிலவரப்படி புழக்கத்திலுள்ள 2000 ரூபாய் நோட்டுகளின் எண்ணிக்கை ரூ. 223 கோடியே 30 லட்சமாக குறைந்துள்ளது என்றும் இது தற்போதைய மொத்த நோட்டுகளில் வெறும் 1.75 சதவீதம் மட்டுமே என்று கூறினார். மேலும் மக்களின் பரிமாற்ற தேவையைப் பொறுத்து ரிசர்வ் வங்கியுடன் ஆலோசனை நடத்தி, குறிப்பிட்ட ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க மத்திய அரசு முடிவு செய்கிறது. ஆனால் 2018- 2019 ஆம் நிதி ஆண்டில் இருந்தே 2000 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்க ஆர்டர் கொடுக்கப்படவில்லை என்றும், மேலும் அந்த நோட்டுகள் அழுக்கடைந்தாலும், சிதைந்தாலும் புழக்கத்திலிருந்து குறைந்து வருகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

Related Posts

Leave a Comment