251
			
				            
							                    
							        
    இந்தியாவின் வடமாநிலங்களில் கடந்த சில நாட்களாக கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது. குறிப்பாக, டெல்லியில் நிலவிவரும் கடுமையான பனிமூட்டம் காரணமாகப் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் வீதியில் பயணிக்கும் வாகனங்கள் கண்ணுக்கு புலப்படாததால் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டபடியே வாகனங்களை சாரதிகள் இயக்கி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளைகடும் பனிமூட்டம் காரணமாக டெல்லியில் விமான சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. எவ்வாறு இருப்பினும் டெல்லியில் காற்றின் தரம் சற்று அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
