கொரோனா பரவல் – பிரதமர் மோடி இன்று ஆலோசனை !

by Lifestyle Editor

கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து இன்று பிரதமர் மோடி உயர்மட்ட குழுவுடன் ஆலோசிக்கிறார்.

சீனாவில் கொரோனா பரவல் மீண்டும் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து பரவ தொடங்கிவிட்டது. மே மாதத்தில் இருந்து கொரோனா வேகம் எடுக்கத் தொடங்கியது. கொரோனா பரவலின் தீவிரதத்தால் சீனாவில் கடந்த அக்டோபர், நவம்பர் மாதங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. சீனாவில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் சூழலில் அண்டை நாடுகள் அச்சமடைய தொடங்கியுள்ளன. குறிப்பாக இந்தியாவில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. சீனாவில் வேகமாக பரவும் பி எஃப் 7 கொரோனா இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளது . இந்தியாவில் பி எஃப் 7 கொரோனா ஒடிசாவில் ஒருவருக்கும், குஜராத்தில் இருவருக்கும் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்தியாவில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை தொடர்பாக பிரதமர் மோடி இன்று பிற்பகல் உயர்மட்ட குழு உடன் முக்கிய ஆலோசனை மேற்கொள்கிறார். சீனாவில் பரவி வரும் உருமாற்றமடைந்த பிஃஎப் 7 வகை கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ள நிலையில் இன்று ஆலோசனை நடைபெறுகிறது. புதிய வகை கொரோனா பரவலை தடுப்பது குறித்து பிரதமர் மோடி ஆலோசிக்கிறார்.

Related Posts

Leave a Comment