கர்நாடகாவில் ஒரே பள்ளியைச் சேர்ந்த 107 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு..

by Column Editor

கர்நாடகாவில் கொரோனா பாதிப்புகளுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 7 ஆயிரத்தை தாண்டியுள்ளது. நாட்டில் முதன்முறையாக கர்நாடக மாநிலம் பெங்களூருவில் தான் இருவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு இருப்பது இந்த வாரம் கண்டுபிடிக்கப்பட்டது. இது ஒருபுறமிருக்க கடந்த 10 நாட்களில் கர்நாடக மாநிலத்தில் 500 க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவர்கள் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். அதில் மருத்துவ துறை சார்ந்த படிப்புகளில் இருக்கும் மானவர்கள் அதிகம்.

அந்தவகையில் நேற்று , கர்நாடகாவின் சிவமொக்கா நகரில் அமைந்துள்ள தனியார் நர்சிங் பள்ளியை சேர்ந்த 29 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானது. அந்த மாணவர்களில் பலருக்கு தொற்று பாதிப்புக்கான அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை எனக் கூறப்பட்டது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் சிக்மகளூர் மாவட்டம் சீகோட்டில் உள்ள தனியார் பள்ளியைச் சேர்ந்த 107 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிவேகமாக பரவும் தன்மை கொண்ட ஓமைக்ரான் கண்டறியப்பட்டுள்ள கர்நாடக மாநிலத்தில், அதிகப்படியான மாணவர்கள் கொரோனா தொற்றுக்கு ஆளாவது அனைத்து தரப்பினரையும் அச்சமடையச் செய்துள்ளது.

காரணம் கல்லூரி மாணவர்கள் பலர் வெவ்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து வந்து படிப்பவர்களாக இருக்கலாம். தனிமைபடுத்தல் நடைமுறைக்காக அவர்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டால் எளிதில் கொரோனா பரவும் சூழல் ஏற்படும். தொற்று அதிகரிக்கும் பட்சத்தில் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Related Posts

Leave a Comment