காரைக்காலில் 35 வயது பெண் உயிரிழப்பு ..

by Lifestyle Editor

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தை சேர்ந்த 35 வயது பெண் ஒருவருக்கு மூளையில் கட்டி ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் காரைக்காலில் உள்ள ஜிப்மர் கிளை மருத்துவமனையில் கடந்த 20 நாட்களாக சிகிச்சை பெற்றுள்ளார். அவருக்கு மேல் சிகிச்சை தேவைப்பட்டதால் புதுச்சேரி ஜிப்மருக்கு கடந்த ஒன்றாம் தேதி கொண்டு வரப்பட்டார்.

எந்த நோயாளி அனுமதிக்கு வந்தாலும் கொரோனா பரிசோதனை எடுக்கும் நடைமுறைப்படி, அவருக்கு பரிசோதனை எடுத்ததில் 2 ம் தேதி நோய் தொற்று உறுதியானதை தொடர்ந்து அவர் இன்று இறந்தார்.உடனடியாக அவரது உடல் காரைக்காலுக்கு கொண்டு செல்லப்பட்டு கொரோனா விதிமுறைகளின் படி அடக்கம் செய்யப்பட்டது.

காரைக்காலில் ஒற்றை இலக்கில் இருந்த கொரோனா தொற்று தற்போது இரட்டை இலக்கிற்கு அதிகரித்துள்ளது.20க்கும் மேற்பட்டோர் கொரோனாவிற்கு பாதிக்கப்பட்டிருப்பதாக காரைக்கால் சுகாதார துறை துணை இயக்குனர் மோகன்ராஜ் தெரிவித்துள்ளார்.

இதனிடையே புதுச்சேரியில் இருந்து திருப்பதிக்கு செல்லும் வழியில் வில்லியனூர் சுல்தான்பேட்டை ரயில்வே ஜங்ஷனில் இன்று முதல் நிறுத்தி பயணிகளை ஏற்றி செல்லும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு அதற்காக இன்று ரயிலை கொடி அசைத்து துவக்கி வைத்த பிறகு ஆளுநர் தமிழிசை பேட்டி அளித்தார். அப்போது பேசிய தமிழிசை, புதுச்சேரி சுகாதாரத்துறையிடம் நாளை அறிக்கை தாக்கல் செய்ய அறிவுறுத்தி உள்ளேன். அந்த அறிக்கையின் பொறுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அறிவிக்கப்படும் என்றார்.

அவர் கொரோனா பாதிப்பால் பாதிக்கப்பட்டாரா என்பது தெரியவில்லை. அவருக்கு இணை நோய் இருந்துள்ளது அது குறித்து அறிக்கை கேட்டுள்ளேன் வந்த பிறகு முழு விவரம் தெரிவிக்கப்படும் என்றார்.

Related Posts

Leave a Comment