நீரின்றி அமையாது உலகு: நீரே உணவு எனும் தொனிப்பொருளில் உலக உணவு தினம்

by Lankan Editor

உலக உணவு தினம், ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 16 அன்று கொண்டாடப்படுகிறது. இந்த நாள் உணவுப் பற்றாக்குறை, ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் பட்டினியால் அவதிப்படும் மக்கள் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்துவதை முக்கிய நோக்கமாக கொண்டது.

உலகில் உள்ள அனைத்து உயிர்களும் உயிர்வாழ அடிப்படை ஆதாரம் உணவுதான். நோய் நொடியின்றி மனிதன் உயிர்வாழ தேவையான ஊட்டச்சத்து, உணவு மூலமாக தான் நமக்கு கிடைக்கிறது. அத்தகைய உணவை சிறப்பிக்க, உலக உணவு தினம், ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 16 அன்று கொண்டாடப்படுகிறது.

இந்த நாள் உணவுப் பற்றாக்குறை, ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் பசி, பட்டினியால் அவதிப்படும் மக்கள் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்துவதை முக்கிய நோக்கமாக கொண்டது. அதுமட்டுமின்று, மாறிவரும் உணவுப் பழக்கம் , இதனால் மாறும் வாழ்க்கை முறை போன்ற பல விஷயங்களை சுட்டிக்காட்ட இது ஒரு பொன்னான நாள் என்கின்றனர் ஊட்டச்சத்து வல்லுநர்கள்.

அந்தவகையில், உணவின் பாதுகாப்பை உறுதி செய்யவும், பசி, பட்டினியை எதிர்த்துப் போரிடவும் 1945 இல் ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பு குயுழு (குழழன யனெ யுபசiஉரடவரசந ழுசபயnணையவழைn) இந்த நாளை உருவாக்கியது. மேலும், இந்த நாளில் உணவு உற்பத்தி செய்யும் விவசாயிகள் முதல் உணவினை ஏற்றுமதி , இறக்குமதி என வேலை பார்க்கும் அத்தனை பேருக்கும் நன்றி தெரிவிக்கும் நாளாகவும் உள்ளது.

இந்த ஆண்டிற்கான உலக உணவு தினத்தின் கருப்பொருள் “நீரே உயிர்; நீரே உணவு.” என்பதாகும் . உலகின் பல நாடுகளில் நீர்பற்றாக்குறை மட்டும் நீரில்லா பிரச்சினைக்கு முகம்கொடுத்து வரும் நிலையில் நீரின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதமாக இம்முறை உலக உணவு தினம் கொண்டாடப்படுகிறது.

‘அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்பெற்றான் பொருள்வைப் புழி”அதாவது ‘வறியவரின் கடும்பசியை தீர்க்க வேண்டும், அதுவே பொருள் பெற்ற ஒருவன் அப்பொருளை தனக்கு பிற்காலத்தில் உதவுமாறு சேர்த்து வைக்கும் இடமாகும் என திருவள்ளுவர் கூறியுள்ளார். இதன்படி, பட்டினியில்லா சமுதாயம் உருவாக, வீணாக்கும் உணவை சேமித்து, ஏழைகளுக்கு வழங்கி சேவை செய்ய அனைவரும் முன்வர வேண்டும்.

Related Posts

Leave a Comment