நாசா விண்வெளி ஆய்வுப் பயணத் திட்டம் – இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அனில் மேனன் தேர்வு

by Column Editor

நாசாவின் விண்வெளிப் பயணத் திட்டத்துக்காக தேர்வு செய்யப்பட்டுள்ள பத்து பேரில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அனில் மேனன் இடம் பெற்றிருக்கிறார்.

அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, நிலவு, செவ்வாய் கிரகம், சர்வதேச விண்வெளி நிலையம் ஆகியவற்றிக்கு மனிதர்களை அனுப்பி ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள திட்டமிட்டிருக்கிறது.

இதற்காக விண்வெளி வீரர்களை தேர்வு செய்யும் பணிகள் நடந்து வந்தன. இப்பணிகளுக்காக 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்தார்கள். அவர்களிலிருந்து 4 பெண்கள் உள்ளிட்ட பத்து பேர் தேர்வாகி இருக்கிறார்கள். இந்த பத்து பேரில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 45 வயதான அனில் மேனன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இவர், அமெரிக்க விமானப்படையில் லெப்டினன்ட் கர்னலாக பணியாற்றி வருகிறார். ஹவார்வர்டு பல்கலைக்கழகத்தில் நியூரோபயாலஜியில் இளங்கலைப் பட்டமும், ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் இயந்திரப் பொறியியல் முதுகலைப் பட்டமும் பெற்றுள்ளார். அனில் மேனன். நாசாவின் முந்தைய விண்வெளி ஆய்வுகளிலும் பணியாற்றிய அனுபவம் பெற்றிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave a Comment