அரசியல்வாதிகளாக மாறும் பிக்பாஸ் போட்டியாளர்கள்.. புதிய டாஸ்க்கால் களவரம் நடக்குமா ?

by Column Editor

பிக்பாஸ் வீட்டில் கொடுக்கப்பட்ட புதிய டாஸ்க்கால் ரசிகர்களிடையே நிகழ்ச்சியின் ஆர்வம் அதிகரித்துள்ளது.

இன்றைய தினத்தின் முதல் ப்ரோமோவில் பாவனி மற்றும் அமீர் இடையேயான ரொமொன்ஸ் காட்சிகள் வெளியிடப்பட்டிருந்தது. அதனால் கடந்த சீசன்கள் போல் தற்போது இவர்களின் காதலை வைத்துதான் அடுத்த எபிசோடுகள் செல்லவுள்ளதாக ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் தற்போது புதிய டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. இந்த டாஸ்க்கால் நிச்சயம் பிக்பாஸ் வீட்டில் களேபரம் நடக்கும் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அது குறித்தத இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில், இதுவரை இந்த பிக்பாஸ் வீடு எவ்வளவோ பிரச்சனைகளை பார்த்துள்ளது. பிரச்சனையை பிரச்சாரமாக மாற்றி பார்த்திருக்கா. பலவீனங்களையும் உங்கள் பலமாக மாற்ற தயாராகுங்கள். ஏனென்றால் இந்த பிக்பாஸ் அரசியல் மாநாடாக மாறவுள்ளதாக புதிய டாஸ்க்கை பிக்பாஸ் அறிவிக்கிறார். இதனால் போட்டியாளர்கள் மகிழ்ச்சியில் உறைகின்றனர்.

இந்த டாஸ்க் என்னவென்றால், பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்கள் மூன்று குழுக்களாக பிரிந்து மூன்று கட்சிகளை உருவாக்கவேண்டும். அதன்படி சஞ்சீவி தலைமையில் ஒரு குழுவை உருவாக்கினார். அதில் இமான், ராஜு, தாமரை உள்ளிட்டோர் இடம்பெறுகின்றனர். இதையடுத்து நிரூப், அக்ஷரா, சிபி ஆகியோர் ஒரு குழு என்று சொல்லும்போது, அந்த டீமே வேண்டாம் உங்கள் கட்சியில் இருக்கிறேன் என்கிறார் அக்ஷரா. பிக்பாஸ் வீட்டில் அரசியல் மாநாடு நடக்கவிருப்பதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

Related Posts

Leave a Comment