ராஜூவுக்கு கமல் சொன்ன அட்வைஸ் !

by Lifestyle Editor

பாராட்டுகளை போன்று விமர்சனங்களை ஏற்றுக்கொண்டால் மட்டுமே ரசிகர்களின் ஆதரவு கிடைக்கும் என்று ராஜூவுக்கு நடிகர் கமல் அறிவுரை கூறியுள்ளார்.

கடந்த வாரம் போட்டியாளர்களுக்கு ப்ரேக் நியூஸ் என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டது. இதில் போட்டியாளர்கள் ரெட் டிவி, ப்ளூ டிவி என இரண்டு அணிகளாக பிரிந்து விளையாடினர். ப்ளூ டிவி அணியில் அபிஷேக் மற்றும் சிபி இணைந்து விளையாடும் போது காரசார வாக்குவாதங்கள் நடைபெற்றது. இதையடுத்து ஒரே அணியில் இருக்கும் போட்டியாளர்கள் அடித்துக்கொண்டனர்.

இது குறித்து கமல், ராஜுவிடம் விசாரிக்கும் ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில், பிக்பாஸ் வீட்டில் ராஜூ வளர, மற்ற போட்டியாளர்களை இருட்டடிப்பு செய்கிறார் என்று குற்றச்சாட்டு எழுவதாக கமல் சொல்கிறார். அதற்கு இல்லை என்று மறுக்கும் ராஜு, அப்படியொரு எண்ணமே இல்லை என்கிறார். அப்படியென்றால் இது நான் சொல்லும் கருத்து போன்று நினைக்க தோன்றும், அதனால் உங்களுடன் இருக்கும் நடுவரிடம் கேட்கிறேன் என்று சஞ்சீவ்விடம் கேட்கிறார் கமல்.

அதற்கு பதிலளித்த சஞ்சீவி, அது ரொம்ப அமெச்சூரா இருந்தது என்று தன்னுடைய கருத்தை பதிவு செய்தார். என்னுடைய குழுவில் சரியான ஒத்துழைப்பு இல்லை சார் என்று கமலிடம் மீண்டும் தனது கருத்தை ராஜு பதிவு செய்கிறார். ராஜுவின் இந்த பதிலுக்கு கருத்து சொன்ன கமல், பாராட்டுக்களை போன்று விமர்சனங்களையும் ஏற்றுக்கொள்ளவேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே ரசிகர்களின் ஆதரவும், திருப்தியும் கிடைக்கும் என்று கமல் ராஜுவுக்கு அறிவுரை சொல்வது ப்ரோமோவில் இடம்பெற்றுள்ளது.

Related Posts

Leave a Comment