பிக்பாஸிலிருந்து இந்த வாரம் வெளியேறும் போட்டியாளர் யார் தெரியுமா? வெளியான தகவல்

by Column Editor

கடந்த வாரம் பிக்பாஸ் (Biggboss Tamil 5) நிகழ்ச்சியில் இருந்து, பாப் பாடகியும் மருத்துவருமான ஜக்கி பெரி பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய நிலையில், இந்த வாரம் வெளியேற உள்ள போட்டியாளர் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சி விளையாட்டை பொறுத்தவரை போட்டியாளர்கள் நிகழ்ச்சியில் இருக்க வேண்டுமா? இல்லையா என்பதை தீர்மானிப்பது பிக்பாஸ் ரசிகர்களும் மக்களும் தான். இதனால் தான் இந்த நிகழ்ச்சி 5 ஆவது சீசனில் கூட டி.ஆர்.பி-யில் பட்டையை கிளப்பி வருகிறது.

விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சியில்… ஆரம்பத்தில் அன்பை பொழிந்த போட்டியாளர்கள் கூட தற்போது ஒருவர் மீது ஒருவர் தங்களுடைய வெறுப்பை காட்டி வருகிறார்கள்.

இவ்வளவு ஏன் நேற்றைய தினம் மூவர் அணியாக செயல்பட்டு வந்த, பிரியங்கா, அபிஷேக், மற்றும் நிரூப் ஆகியோருக்குள்ளேயே பிரச்சனை தோன்றி பரபரப்பை ஏற்படுத்தியது.

நாளுக்கு நாள், யாரும் எதிர்பாராத திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில், இந்த வாரம் சிபி, வருண், அபிஷேக், பிரியங்கா, இமான் அண்ணாச்சி, அக்ஷரா, தாமரைச்செல்வி, பாவனி, அபினய் மற்றும் ராஜூ ஆகிய 10 போட்டியாளர்கள் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில் அபிஷேக், அபினய் மற்றும் வருண் ஆகிய மூன்று போட்டியாளர்கள் மிகவும் குறைந்த வாக்குகள் பெற்று டேஞ்சர் சோனில் இருப்பதாக கூறப்பட்டது.

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள தகவலில், வயல் கார்டு போட்டியாளராக உள்ளே வந்து, மீண்டும் பல விஷயங்களில் வாயை விட்டு சிக்கிய அபிஷேக் தான் வெளியேறியுள்ளதாக கூறப்படுகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் வீட்டிற்குள் வந்த 21 நாட்களிலேயே வெளியேறிய இவருக்கு… மீண்டும் வந்த சோதனையாக உள்ளே வந்த வேகத்தியிலேயே மீண்டும் வெளியேறியுள்ளார்.

Related Posts

Leave a Comment