487
சின்னத்திரையில் பிரமாண்ட நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இதனுடைய ஐந்தாவது சீசன் தற்போது நடக்கிறது.
இதில் பிரியங்கா, ராஜு, சஞ்சீவ், இமான் அண்ணாச்சி உள்ளிட்ட 20 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர்.
மேலும் 7 போட்டியாளர்கள் வீட்டை விட்டு வெளியேற, தற்போது 13 போட்டியாளர்களுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடைபெறும் சீக்ரெட் விஷயம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது என்னவென்றால் பிக் பாஸ் வெக்அப் பாடல் வீட்டிற்குள் மொத்தம் நான்கு முறை பிலே செய்யப்படுமாம்.
ஆனால், நாம் நிகழ்ச்சியில் பார்க்கும் பொழுது ஒரு முறை மட்டுமே பிலே செய்வது போல் எடிட் செய்து காட்டப்படுகிறது.
இந்த சீக்ரெட் தற்போது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாக பேசப்பட்டு வருகிறது.