மூஞ்சியை உடைச்சிடுவேன்… கொந்தளித்த அபிஷேக் !

by Column Editor

பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி 62 நாட்களை கடந்துள்ளது.

நாட்கள் நெருங்க நெருங்க பிக் பாஸ் நிகழ்ச்சி இப்போது சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது.

நிரூப்,பிரியங்கா,அபிஷேக் ஒரே அன்பு டீமாக செயல்பட்டுவந்த நிலையில், இப்போது பரம எதிரியாக மாறி உள்ளார் நிரூப்.

இன்றைய எபிசோடில் நிரூப் பிரியங்கா இடையே சண்டை பயங்கரமாக முட்டிக்கொண்டது.

அனைத்து வேலைகளையும் தாமரை இழுத்துப்போட்டுக் கொண்டு செய்வதால் கடுப்பான பிரியங்கா, வீட்டின் தலைவர் என்ற முறையில் நிரூப்பிடம் புகார் கூறுகிறார். இருவரும் மாறி மாறி பேச ஒரு கட்டத்தில் இருவருக்கும் இடையே பெரிய சண்டையாக உருவாகிறது.

இதையடுத்து, நிரூப், டாஸ்க் ஃபுல்லாவே சும்மா இஷ்டத்துக்கு கலாய்த்தீர்கள், நான் வேண்டாம் என்று கூறியும் விடாமல் இப்படிதான் கலாய்ப்பேன் என்று கூறி கலாய்த்தீர்கள், எதற்கு கலாய்த்தீர்கள் என்று பிரியங்காவிடம் ஆக்ரோஷமாக கத்தினார்.

அப்போது அங்கு வந்த அபிஷேக், பிரியங்காவிடம் ஏன் கத்துற என் கிட்ட கேளுடா என்று கூற இருவரும் மாறி மாறி ஆத்திரத்தில் கத்திக்கொண்டனர்.

இதையடுத்து, நிரூப் உன்னுடைய கோபத்தை எல்லாம் அந்த டிவி டாஸ்க்ல காட்டின, அண்ணாச்சி என்னையும் பற்றி நான் பேச வேண்டாம்னு சொல்லியும் நீ ஏன் அந்த டாஸ்கில் அதை பயன்படுத்துன என்று கேட்டு பிரியங்காவிடம் சண்டை இட்டார். உடனே , பிரியங்கா டேய் … அவர் உன்னை பார்த்து பயந்துட்டான்.. பயந்துட்டானு கிண்டல் பண்ணாருடா… உனக்கு சப்போர்ட் பண்ணதுக்கு, என் புத்திய செருப்பால அடிச்சிக்கிறேன் என்று பிரியங்கா அழத்தொடங்கினார்.

நிரூப் பேசியதை நினைத்து, தொடர்ந்து பிரியங்கா அழுதுக்கொண்டே இருந்ததால், ஆத்திரம் அடைந்த அபிஷேக்…பிரியங்கா உன் அன்புக்கு எல்லாம் அவன் தகுதியே இல்லாதவன்…

அவனுக்காக நீ அழாதே என்று கூறுகிறார். உனக்காத்தான் நான் அமைதியாக இருக்கேன்… இல்லைனா… அவன் மூஞ்சி முகறை… மண்டைய உடைச்சிடுவேன் என்று அபிஷேக் ஆக்ரோஷமாக கத்தினார். அவரை தடுத்த பிரியங்கா, அழமாட்டேன்டா என்று கூறி சமாதானப்படத்தினார்.

Related Posts

Leave a Comment