இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் கமல் ?.. ரசிகர்களை மகிழ்ச்சியாக்கும் செய்தி இதுதான்

by Column Editor

இந்த வார பிக்பாஸ் நிகழ்ச்சியை கமல் தொகுத்து வழங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி 60 நாட்களை கடந்து சென்றுக்கொண்டிருக்கிறது. கடந்த நான்கு சீசன்களை தொகுத்து வந்ததுபோல் இந்த சீசனையும் கமல்தான் தொகுத்து வழங்கி வந்தார். இந்த சீசனில் பெரிய பிரபலங்கள் இல்லையென்றாலும் கமலின் பேச்சை கேட்கவே பெரிய பார்வையாளர்கள் கூட்டம் பிக்பாஸ் நிகழ்ச்சி உள்ளது.

இப்படி பிக்பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்றுக்கொண்டிருக்கும் நிலையில் கடந்த வாரம் அமெரிக்கா சென்று வந்த கமலுக்கு கொரானா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கமலுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. சில நாட்கள் சிகிச்சையில் இருந்த கமல், கொரானா தொற்று நீங்கி பூரண நலம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

கடந்த வாரம் கமல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கமுடியாததால், அவருக்கு பதிலாக நடிகை ரம்யாகிருஷ்ணன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இதையடுத்து கமல் நலம்பெற்றுள்ளதால் இந்த வாரம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே இருந்து வந்தது. இந்நிலையில் மருத்துவமனையிலிருந்து நேரடியாக சென்று பிக்பாஸ் நிகழ்ச்சியை நாளை தொகுத்து வழங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related Posts

Leave a Comment