196
பிரித்தானியாவில் ஒமிக்ரோன் வைரஸிற்கு மிகக் கடுமையான பதில் தேவைப்படலாம் என அரசாங்க ஆலோசகர்கள் தெரிவித்துள்ளனர்.
திங்களன்று நடைபெற்ற அவசரநிலைகளுக்கான ஆலோசனைக் குழுவின் கூட்டத்தில் இந்த விடயம் பேசப்பட்டதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.
மாறுபாட்டின் தரவு சேகரிக்கப்பட்டு பகுப்பாய்வு செய்யப்படும் போது, அதிகாரிகள் தொற்றின் குறிப்பிடத்தக்க அலைக்கு தயாராக வேண்டும் என்று அவர்கள் கூறியுள்ளனர்.
இருப்பினும் தேவை ஏற்படின் மேலதிக நடவடிக்கை எடுக்கப்படும் என பிரித்தானிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
அதிகரித்துவரும் ஒமிக்ரோன் மாறுபாட்டிற்கு பதிலளிக்கும் வகையில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.