சுயபுத்தியை இழந்த நிரூப்… நேரடியாக தாக்கிய ராஜு, இமான் அண்ணாச்சி

by Column Editor

இரண்டாவது ப்ரோமோவில், “சுயபுத்தியை இழந்த நிரூப்” என இமான் செய்தி வாசிக்கிறார்.

பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி தொடங்கி தற்போது 58 நாட்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. கடந்த 4 சீசன்களைப் போல இந்த சீசனையும் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்த நிலையில், தற்போது அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் நடிகை ரம்யா கிருஷ்ணன் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். 18 போட்டியாளர்களுடன் நிகழ்ச்சி தொடங்கிய நிலையில் தற்போது சிபி, ராஜு, இமான் அண்ணாச்சி, வருண், நிரூப், அமீர், சஞ்சீவ், அபினய், அபிஷேக், பாவ்னி, பிரியங்கா, அக்ஷரா, தாமரை என 13 போட்டியாளர்கள் வீட்டில் உள்ளனர்.

தனது நாணயத்தை பயன்படுத்தி இந்த வார தலைவராக நிரூப் பொறுப்பேற்றுள்ளார். இதற்காக இந்த வாரம் முழுவதும் நிரூப் யாரிடம் பேசினாலும், அவர்களின் உயரத்திற்கு கீழே குனிந்து அவர்களின் கண்களை பார்த்து பேச வேண்டும் என்று பிக் பாஸ் தண்டனை கொடுத்துள்ளார். மேலும் இந்த வார நாமினேஷன் லிஸ்டில், ராஜு, பிரியங்கா, தாமரை, சிபி, இமான், பாவ்னி, அக்ஷ்ரா, வருண், அபினய் மற்றும் அபிஷேக் ஆகிய 10 பேர் உள்ளனர். இவர்களில் குறைவான வாக்குகள் பெற்றவர்கள் வரும் வாரம் வெளியேறுவார் என்பதால் யார் வெளியேற போவது என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது.

இந்தநிலையில் நேற்றைய நிகழ்ச்சியில் “பிக் பாஸ் பிரேக்கிங் நியூஸ்” என்ற டாஸ்க் வழங்கப்பட்டது. இதில் ப்ளூ டிவி, ரெட் டிவி என போட்டியாளர்கள் இரு குழுவாக பிரிந்தனர். ப்ளூ டிவி அணியில் ராஜு, அக்ஷ்ரா, தாமரை, பாவ்னி, இமான் ஆகியோரும், ரெட் டிவி அணியில் பிரியங்கா, வருண், அபிஷேக், நிரூப், சிபி ஆகியோர் இருந்தனர். இந்த போட்டியில் நடுவராக சஞ்சீவ் இருந்தார்.அதன்படி இந்த வார தலைவர் டாஸ்கில் நிரூப் – இமான் இடையே இருந்த பிரச்னை குறித்து விவாதிக்கப்பட்டது. பின்னர் தாமரையை தகுதி இல்ல என பிரியங்கா கூறிய விஷயம் குறித்தும் விவாதிக்கப்பட்டது. நேற்று இறுதியாக ரெட் சேனல் நடத்தும் அபிஷேக் ராஜா, சிபி மற்றும் பிரியங்கா ஆகியோர் சிறப்பாக செயல்பட்டதாக கூறி நடுவர் சஞ்சீவ் நேற்று அதிக டிஆர்பி ரேட்டிங் கொடுத்தார்.

இன்று வெளியான முதல் ப்ரோமோவில், ‘போராடி தோக்குறது வேற, ஒண்ணுமே பண்ணாம தோக்குறது வேற’ என அமீர் கூறுகிறார். ஒவ்வொருவாட்டியும் கேள்வி கேக்கும் போது, எனக்கு சரியான பதில் வரல’ என்கிறார் பாவனி. இதையடுத்து, பாவனிக்கும், ராஜுவுக்கும் வாக்குவாதம் ஏற்படுகிறது. பின்னர் பாவனியிடம் ராஜு சாரி கேட்க, ‘எப்போ பாத்தாலும், சண்ட சண்ட சண்ட… என்ன வேற வேலையில்லையா எனக்கு’ என்கிறார் பாவ்னி.

தற்போது வெளியாகியுள்ள இரண்டாவது ப்ரோமோவில், “சுயபுத்தியை இழந்த நிரூப்” என இமான் செய்தி வாசிக்கிறார். இதுகுறித்து ராஜு கேள்வி எழுப்ப, அவர் பெரிய பிளேயர் என நம்ம அவரை கூறுகிறோம் தவிர அவர் எப்போதும் எதிராணிக்காக தான் செயல்படுகிறார் என அபிஷேக் கூறுகிறார். பின்னர் நீங்கள் தனியாக விளையாடுகிறீர்களா? இல்லை கூட்டமாக விளையாடுகிறீர்களா? என இமான் கேட்கிறார்.

அதற்கு ராஜு, நான் தனியாக தான் விளையாடுகிறேன், ஆனால் கூட்டமாக சேர்ந்து எல்லாரும் என் வாழ்க்கையில் விளையாடுகிறார்கள் என்கிறார். மேலும் எங்கு போவது என தெரியாமல், எங்கையாவது போய் சேர்ந்தால் போதும் என விளையாடுகிறேன் என கூறுகிறார். இவர்கள் அனைவரும் நிரூப்பை டார்கெட் செய்வது வெளிப்படையாக தெரிகிறது. இதனால் இன்றும் இந்த டாஸ்கில் மோதல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Posts

Leave a Comment