நிரூப் – இமான் அண்ணாச்சி இடையே தொடரும் மோதல்!

by Column Editor

கடந்த வாரம் அமெரிக்கா சென்று திரும்பிய கமல்ஹாசனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கினார்.

பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி தொடங்கி தற்போது வெற்றிகரமாக 56 நாட்களை கடந்துள்ளது. கடந்த 4 சீசன்களைப் போல இந்த சீசனையும் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்தார். 18 போட்டியாளர்களுடன் நிகழ்ச்சி தொடங்கிய நிலையில் தனிப்பட்ட காரணங்களுக்காக நமீதா இந்நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்.

இதனை தொடர்ந்து நாடியா, அபிஷேக், சின்ன பொண்ணு, ஸ்ருதி, மதுமிதா ஆகியோர் அடுத்தடுத்து வெளியேறினர். இதனால் சிபி, ராஜு, இமான், வருண், நிரூப், அபினய், அக்ஷ்ரா, பாவ்னி, தாமரை, பிரியங்கா, ஐக்கி ஆகியோர் இருந்தனர். இதனிடையே வைல்டு கார்டு எண்ட்ரியாக 3 பேர் உள்ளே நுழைந்துள்ளனர். ரீ-எண்ட்ரியாக பிக் பாஸ் போட்டியாளர் அபிஷேக் ராஜா, முதல் வைல்டு கார்டு எண்ட்ரியாக உள்ளே வந்தார். அவரை தொடர்ந்து நடன இயக்குநர் அமீர் மற்றும் நடிகரும், நிகழ்ச்சி தொகுப்பாளருமான சஞ்சீவ் உள்ளே நுழைந்துள்ளார். இதனால் நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று வருகிறது.

இதனிடையே கடந்த வாரம் அமெரிக்கா சென்று திரும்பிய கமல்ஹாசனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் தன்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதையடுத்து இந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கினார். ரம்யா கிருஷ்ணன் தனது பாணியில் நிகழ்ச்சியின் சுவாரஸ்யம் குறையாமல் தொகுத்து வழங்கினார்.

குறிப்பாக ஸ்கூல் டாஸ்கில் நடந்த பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. அதில் சிபி மற்றும் அக்‌ஷரா இடையேயான பிரச்சனையை விளக்கும் வகையில் குறும்படம் போட்டு காண்பிக்கப்பட்டது. பின்னர் இருவருக்கும் அட்வைஸ் செய்தார். இதனை தொடர்ந்து ஆசிரியர்களாக இருந்த அபிஷேக், ராஜூ, அமீர் மற்றும் வார்டனாக இருந்த சிபிக்கு 5 திருக்குறள் கொடுத்து படித்து ஒப்புவிக்குமாறு ரம்யா கிருஷ்ணன் கூறினார். இறுதியாக ராப் பாடகியான ஐக்கி நேற்று வெளியேற்றப்பட்டார்.

இந்த நிலையில் இன்று திங்கட்கிழமை என்பதால் இந்த வார தலைவருக்கான போட்டி நடைபெறும் இன்றைய முதல் ப்ரோமோ வெளியானது. அதில் “கோபுரங்கள் சாய்வதில்லை” என்ற டாஸ்க் கொடுக்கப்படுகிறது. அதில் பெட்டிகள் கொடுக்கப்பட்டு அதனை போட்டியாளர்கள் அடுக்கி வைக்க வேண்டும், சக ஹவுஸ் மேட்ஸ் ஒரு பந்தை கொண்டு எரிந்து அதனை கீழே விழுமாறு செய்ய வேண்டும் என கூறப்படுகிறது. இதில் இமான் வெற்றி பெறுகிறார். ஆனால் நாணயம் வைத்திருப்பவர்களுக்கு தலைவரை மாற்றும் சலுகைக்கான வாய்ப்பளிக்கப்படுகிறது என பிக் பாஸ் கூற, ‘நான் பண்றேன் பிக் பாஸ்’ என்கிறார் நிரூப். அதற்கு நீ பயந்துட்ட டா என அண்ணாச்சி கூறும் காட்சிகள் உள்ளது.

தற்போது வெளியாகியுள்ள இரண்டாவது ப்ரோமோவில், நிரூப் வழக்கம் போல வீட்டு வேலைகள் செய்ய அணிகள் பிரிக்கிறார். அப்போது நிரூப் கூறுவதை கேட்க இமான் மறுக்கும் காட்சிகள் உள்ளது. மேலும் நீ கூறுவதை என்னால் செய்ய முடியாது என இமான் கூறுகிறார். அதற்கு நான் கூறுவதை கேட்க மறுத்தால் என்ன செய்ய வேண்டும்? என நிரூப், பிக் பாஸிடம் கேட்கும் காட்சிகள் உள்ளது. இதனால் இன்று நிரூப் – இமான் இடையே பிரச்னை ஏற்படும் என எதிர்பாக்கப்படுகிறது.

Related Posts

Leave a Comment