2-வது ‘டோஸ்’ தடுப்பூசி போட்டால் ஃபிரிட்ஜ் இலவசம்

by Column Editor

கொரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்த உலக நாடுகள் தங்களது நாட்டு மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகளை முடக்கிவிட்டுள்ளன.

இந்நிலையில் முதல் டோஸ் தடுப்பூசி போட்டுக் கொள்ளும் மக்கள் இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்துவதில் தவறவிடுகின்றனர்.

எனவே இவர்களை உற்சாகப்படுத்தும் விதமாக பீகாரில் மாபெரும் பரிசுத்திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

லாட்டரி குலுக்கல் மூலம் தெரிவு செய்யப்படும் நபர்களுக்கு டி.வி., பிரிட்ஜ், கிரைண்டர், கியாஸ் ஸ்டவ், மின்விசிறி உட்பட பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து அந்த மாநில சுகாதார மந்திரி மங்கள் பாண்டே, கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மக்களை காக்கவும், தடுப்பூசி போடுவதை ஊக்கப்படுத்தவும்தான் இந்த நடவடிக்கையை சுகாதாரத்துறை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

Related Posts

Leave a Comment