‘நீ யாரு கேள்வி கேட்க’… சிபியிடம் பொங்கிய அக்ஷரா

by Column Editor

சிபி சொல்வதை அக்ஷரா கேட்காததால் இருவருடையே சண்டை ஏற்படும் ப்ரோமோ வெளியாகியுள்ளது.பிக்பாஸ் வீட்டில் நேற்று முதல் கனா காணும் காலங்கள் என்ற புதிய டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த டாஸ்க்கிலீ போட்டியாளர்கள் பள்ளிப் பருவத்திற்கே சென்று விளையாடி வருகின்றனர். அதன்படி பிக்பாஸ் வீட்டில் பள்ளியின் தலைமை ஆசிரியராக சிபியும், ஆசிரியர்களாக ராஜூ மற்றும் புதிதாக வைல்டு கார்டு என்ட்ரியில் வந்த அமீரும் இருக்கின்றனர். இந்த மூவரை தவிர மற்றவர்கள் பள்ளி மாணவராக மாறி விளையாடி வருகின்றனர்.

தற்போது சிபி பள்ளியின் தலைமை ஆசிரியராக மாறி மாணவர்கள் செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டி வருகிறார். இப்படி சுறுசுறுப்பாக போகும் புதிய டாஸ்க்கின் முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில், டைனிங் ஏரியாவில் இருக்கும் சிபி, அக்ஷராவிடம் எங்கே செல்கிறார் என்று கேள்வி எழுப்புகிறார். அப்போது சீருடையை அயர்ன்‌ செய்யவேண்டும் என்ற அக்ஷரா சொல்ல, சீக்கிரம் பண்ணிட்டு வா நேரம் ஆகுது என்று‌ சிபி கூறுகிறார்.நீங்க எனக்கு நேரம் கொடுத்தே ஆக வேண்டும் என அக்ஷரா கேட்க, அதற்கு அயர்ன் செய்ய வேணாம் போ என கடுமையாக சிபி சொல்கிறார். இதையடுத்து ரெஸ்ட் ரூமுக்கு செல்லும் அக்ஷரா, அங்குள்ள பொருட்களை உடைத்து கோபத்தை காட்டுகிறார். நீ யாரு என்ன கேட்க என்று அக்ஷரா சத்தமாக கத்தும் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

Related Posts

Leave a Comment