தலையில் மாறிமாறி முட்டை உடைக்கும் போட்டி.. மீண்டும் முட்டிக்கொண்ட தாமரை – இசைவாணி

by Column Editor

தலையில் முட்டை உடைக்கும் போட்டியில் தாமரை மற்றும் இசைவாணி முட்டிக்கொள்ளும் காட்சிகள் வெளியாகியுள்ளது. புதிய புதிய டாஸ்க்குகளை கொடுத்து போட்டியாளர்களை சோதித்து வருகிறது பிக்பாஸ். அந்த வகையில் கடந்த மூன்று நாட்களாக ‘உள்ளதை உள்ளபடி காட்டும் கண்ணாடி’ என்ற டாஸ்க்கில் போட்டியாளர்கள் விளையாடி வந்தனர். தினந்தோறும் எந்த போட்டியாளரிடம் யார் ஜோடி சேர்ந்து விளையாடவேண்டும் என்பதை பிக்பாஸ் அறிவிப்பார்.அதன்படி நேற்று விளையாடிய இசைவாணியும், தாமரைச்செல்வியும் காரசார விவாதம் செய்து சண்டைப்போட்டிக்கொண்டனர். இதனால் இவர்கள் இருவர்களிடையே பனிப்போர் நீடித்து வருகிறது. இந்நிலையில் இன்றைய தினத்தின் முதல் ப்ரோமோவிலும் இருவரிடையே அதே பிரச்சனை நீடிப்பது போன்றே காட்சிகள் காட்டப்பட்டுள்ளது.

அந்த வகையில் இன்று என் கேள்விக்கு என்ன பதில் என்ற புதிய டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. அதில் முதல் ஜோடியாக இசைவாணியும், தாமரைச்செல்வியும் பங்கேற்கின்றனர். அப்போது கன்பக்ஷன் ரூமிற்கு சென்ற முதல் நபர் யார் என்ற கேள்வி கேட்கப்படுகிறது. அதற்கு இருவரும் பதில் தெரியவில்லை என்று கூறுகின்றனர். இதையடுத்து யார் பதில் அளிக்கவில்லையே அவர் தலையில் மாறிமாறி முட்டை உடைக்கப்படுகிறது. இந்த முட்டை உடைக்கும் போட்டியில் இருவருக்கிடையே மீண்டும் மோதல் ஏற்படுகிறது.

Related Posts

Leave a Comment