சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தில் ஒரு பாடல் எழுதியுள்ள சிவகார்த்திகேயன்!

by Column Editor

சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் ஒரு பாடல் எழுதி இருப்பதாக கூறப்படுகிறது.

நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உருவெடுத்துள்ளார் அதே நேரத்தில் தயாரிப்பாளராகவும் சிறந்த பாடகராகவும் முன்னேறி வருகிறார். இப்படி பன்முகத் திறமை கொண்ட கலைஞராக வளர்ந்து வரும் சிவகார்த்திகேயன் சிறந்த பாடலாசிரியராக உருவெடுத்து வருகிறார்.சிவகார்த்திகேயன் இதுவரை நான்கு பாடல்களுக்கு வரிகள் எழுதியுள்ளார். டாக்டர் படத்தில் செல்லம்மா சோ பேபி ஆகிய பாடல்களுக்கு சிவகார்த்திகேயன் தான் பாடல் வரிகள் எழுதியிருந்தார். அந்தப் பாடல்கள் சூப்பர் ஹிட் ஆனது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சூர்யா நடிப்பில் வெளியாக இருக்கும் எதற்கும் துணிந்தவன் படத்தில் சிவகார்த்திகேயன் ஒரு பாடலுக்கு வரிகளில் இருப்பது குறிப்பிடத்தக்கது. வரும் நாட்களில் பெரிய பாடலாசிரியராகவும் சிவகார்த்திகேயன் முன்னேறுவார் என்று கோலிவுட் வட்டாரத்தில் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் ‘எதற்கும் துணிந்தவன்’ திரைப்படம் உருவாகி வருகிறது. பிரியங்கா அருள் மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து சத்யராஜ், ராதிகா, சூரி, சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, தங்கதுரை, இளவரசு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். டி.இமான் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார்.

Related Posts

Leave a Comment