யார் தலைவர் ஆகக்கூடாது ? … நிரூப்பை குறி வைக்கும் போட்டியாளர்கள்

by Column Editor

இந்த வார தலைவரை தேர்ந்தெடுக்கும் நிகழ்வு குறித்த ப்ரோமோ வெளியாகியுள்ளது.

கடந்த வாரம் கொடுக்கப்பட்ட பொம்மை டாஸ்க்கால் பிக்பாஸ் வீட்டில் ஏகப்பட்ட பிரச்சனைகள் ஏற்பட்டது. இதனால் போட்டியாளர்கள் சண்டைப்போட்டுக் கொண்டு பிக்பாஸ் வீடே களவரமாகிவிட்டது. இது குறித்துதான் போட்டியாளர்களிடம் கேள்வி மேல் கேள்விகளை எழுப்பினார் கமல். அதில் போட்டியாளர்கள் வரம்பு மீறியதாகவும், அவர்களின் வரம்பு என்ன என்பது குறித்து புரிய வைத்தார்.

இந்நிலையில் இன்று திங்கட்கிழமை என்பதால் இந்த வார தலைவரை தேர்ந்தெடுக்கும் நடைமுறை தொடங்கியது. அது குறித்த ப்ரோமோதான் வெளியாகி சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது. அதில் பிக்பாஸ் கூறியதை படிக்கும் இமான் அண்ணாச்சி, பிக் பாஸ் வீட்டில் தலைவரை தேர்ந்தெடுப்பது வழக்கம். ஆனால் இந்த வாரம் யார் தலைவராக வரக்கூடாது என்ற போட்டி நடக்கிறது. அதன்படி தங்களது கருத்தை தையரியமாக சொல்லவேண்டும் என்கிறார்.

அதோடு நிரூப்பை இந்த வார தலைவராக தேர்ந்தெடுக்காதீர்கள். அப்படி தேர்வு செய்தால் வீடு நல்லா இருக்காது என்று‌ இமான் அண்ணாச்சி காமெடியாக கூறுகிறார். அந்த வகையில் இந்த வாராக பிரியங்கா, சிபி, ஜக்கி, நிரூப் ஆகியோர் நிற்கின்றனர். அந்த நான்கு பேரில் ஒருவரை தேர்ந்தெடுக்க வாக்கெடுப்பு நடைபெறுகிறது. அப்போது பேசும் பிரியங்கா, நிரூப் தலைவராக இருந்தபோது என்ன செய்தார்‌ என்பது அனைவருக்கும் தெரியும் என்றார்‌. இதையடுத்து தாமரை வாக்கெடுப்பில் தண்ணீர் ஊற்றுகின்றனர். கடைசியில் நிரூப்பை கழுவி ஊற்றியும், பிரியங்காவை தலைவராக்குவது போன்றும் ப்ரோமோ நிறைவுபெறுகிறது.

Related Posts

Leave a Comment