பிபி5-ல் ரீஎண்ட்ரி கொடுக்கப்போகும் போட்டியாளார்..

by Lifestyle Editor

பிக்பாஸ் 5 சீசன் தற்போது 40 நாட்களை தாண்டி ஒளிப்பரப்பாகி சென்று கொண்டிருக்கிறது. நேற்று கமல்ஹாசன் நிகழ்ச்சியின் போது ராஜு மக்களால் காப்பாற்றப்பட்டார் என்ற செய்தியை கூறியதோடு பழிவாங்க நடத்தப்பட்ட நிகழ்வு என்று கூறி மூக்குடைத்துள்ளார் கமல்ஹாசன்.

இந்நிலையில் 40 நாட்களை கடந்த நிலையில் பிக்பாஸ் 3 வது சீசனில் வனிதா விஜயகுமாரை உள்ளே கொண்டு வந்ததை போன்று பிக்பாஸ் 5 நிகழ்ச்சியில் இரண்டாவதாக வெளியேறி அபிஷேக் ராஜாவை மீண்டும் உள்ளே கொண்டுவர பிக்பாஸ் குழு பிளான் செய்துள்ளதாக செய்திகள் தெரியவந்துள்ளது.

ஏற்கனவே போட்டியாளர்களுக்கிடையில் பல பிரச்சனைகள் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் அபிஷேக் ராஜா ரீஎண்ட்ரி கொடுக்க வைப்பது ரசிகர்களுக்கு மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தி வருகிறது.

Related Posts

Leave a Comment