எது எல்லை ? எது வரம்பு ? என்பதை சுட்டிக் காட்டியே ஆகவேண்டும் : மிரட்டும் கமல் ஹாசன்

by Column Editor

பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி இன்றுடன் 41 நாட்கள் ஆகிறது. 18 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சியில் இதுவரை நமிதா மாரிமுத்து, நாடியா சாங், அபிஷேக் ராஜா, சின்ன பொண்ணு,சுருதி உள்ளிட்டோர் வெளியேறிவிட்டனர்.

நாளாக நாளாக பிக்பாஸ் நிகழ்ச்சி சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. கடந்த இரண்டு நாட்களாக பிக் பாஸ் வீட்டில் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பாசிட்டிவாக விருது கொடுத்த போது ஹவுஸ் மேட்ஸ் சந்தோஷமாகவும் , நெகட்டிவாக விருது கொடுக்கும்போது வேண்டாவெறுப்பாக வாங்கி கொண்டனர். அதன்படி வருணுக்கு சகுனி பட்டம், அக்ஷராவுக்கு விஷ பாட்டில் ,இசைக்கு தொட்டாசினிங்கி , மதுமிதாவுக்கு அழுமூஞ்சி உள்ளிட்ட விருதுகள் வழங்கப்பட்டது.

இதையடுத்து பிக்பாஸ் வீட்டில் தனியாக விளையாடாமல், நிஜமுகத்தை காண்பிக்காமல் இருக்கும் நபர்களை தேர்வு செய்ய வேண்டும் என பிக் பாஸ் மீண்டும் மோதலுக்கான டாஸ்க்கை கொடுக்க அதில் ராஜு , அண்ணாச்சி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு தண்டனையும் வழங்கப்பட்டது. இப்படியாக பிக்பாஸ் நிகழ்ச்சி பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது.

இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 5 இல் இன்றைய நிகழ்ச்சிக்கான முதல் ப்ரோமோவில் கமல் ஹாசன், வெளியில் புயலும், மழையும் ஓய்ந்த சாயல் தெரிகிறது. வீட்டுக்குள் புயல் சின்னங்கள் உருவாகி இருக்கின்றன. பொம்மைகளை வைத்து விளையாட சொன்ன ஒரே காரணத்துக்காக இவ்வளவு குழந்தைத்தனமாக மாற வேண்டியது இல்லை. இப்போது இவர்களின் விளையாட்டு மல்யுத்தத்தை நோக்கி நெருங்கிக் கொண்டிருக்கிறது. எது எல்லை ?எது வரம்பு ?என்பதை இவர்களுக்கு சுட்டிக் காட்டியே ஆகவேண்டும். அதை செய்வோம் என்று சொல்லும்படியாக ப்ரோமோ வீடியோ முடிகிறது.

Related Posts

Leave a Comment