அக்ஷராவின் உருவ பொம்மையை உடைக்கும் சிபி

by Column Editor

பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி 35 நாளைக் கடந்துள்ளது. பிக் பாஸ் வீட்டில் இருந்து நமீதா மாரிமுத்து, நாதியா சாங், அபிஷேக், சின்ன பொண்ணு வெளியேறிய நிலையில் நேற்றைய எபிசோடில் சுருதி எவிக்ட் செய்யப்பட்டார். தாமரையிடம் இருந்து அவர் கைப்பற்றிய நாணயத்தையும் யாருக்கும் கொடுக்க பிக் பாஸ் அனுமதிக்கவில்லை. அவருடனே எடுத்துச் செல்ல சொல்லிவிட்டார். தாமரையுடன் ஏற்பட்ட சண்டையால் தான் அவர் எவிக்ட் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இன்றைய நிகழ்ச்சிக்கான முதல் புரோமோ வெளியாகியுள்ளது. அதில், இந்த வார தலைவர் டாஸ்க் நடைபெறவிருப்பதாக ராஜூ அறிவிக்கிறார். செண்பகமே செண்பகமே டாஸ்க்கில் வெற்றி பெற்ற ப்ளூ டீம், தலைவர் போட்டிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களது புகைப்படங்கள் பொருத்தப்பட்ட உருவ பொம்மைகள் கார்டன் ஏரியாவில் வைக்கப்படுகிறது.
யார் தலைவராக இருக்க உங்களுக்கு விருப்பமில்லையோ அவர்களது பொம்மையின் தலையை உடைக்க வேண்டுமென பிக் பாஸ் அறிவித்ததன் படி, சிபி நேராக சென்று அக்ஷரா உருவ பொம்மையை உடைக்கிறார். எல்லாருக்கும் ஒரு வாய்ப்பு இருக்கு, எனக்கு ஒரு வாய்ப்பு கூட இல்ல என்று அவர் சொல்வதை கூட கேட்காமல் சிபி அந்த பொம்மையை உடைக்கிறார். மனுமுடைந்த அக்ஷரா, முதலில் எனக்கு இருக்கும் வாய்ப்பை முடக்கிவிட வேண்டும். அவர் பண்ணது ரொம்ப தப்பு என்று வருணிடம் சொல்லி கண் கலங்குவது போல புரோமோ முடிகிறது.

Related Posts

Leave a Comment