பிக் பாஸில் இருந்து இலங்கை பெண் வெளியேறுகின்றாரா?

by Column Editor

பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கின்றது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்று கிழமை நாமினேஷன் நடைபெறும் . அதில் குறைந்த வாக்குகளை பெற்ற போட்டியாளர் வெளியேற்றப்படுவார்.

இதுவரை நாடியா சாங், அபிஷேக், சின்ன பொண்ணு மற்றும் ஸ்ருதி ஆகிய 4 பேர் வெளியேறி உள்ளனர்.இந்த வாரம் நாமினேஷனில் ராஜு, அபினய், அக்ஷரா, இமான் அண்ணாச்சி, சிபி, பாவனி, மதுமிதா ஆகிய 7 பேர் இடம் பெற்றுள்ளனர்.

தற்போது வந்துள்ள தகவலின்படி இமான் அண்ணாச்சி, பாவனி மற்றும் மதுமிதா ஆகிய மூவரும் குறைந்த வாக்குகள் பெற்று உள்ளதாக கூறப்படுகின்றது.

அதில் இலங்கை பெண் மதுவுக்கு மிகவும் குறைவான வாக்குகள் பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அவர் வெளியேற்றபடலாம் என்று கூறப்படுகின்றது.

இருப்பினும் மூவருக்கும் கிடைத்துள்ள வாக்குகளின் வித்தியாசம் ஆயிரக்கணக்கில் தான் உள்ளதாம்.

Related Posts

Leave a Comment